வாழ்வில் தீமைகள் அழிந்து தைரியமும், சக்தியும் பெற, அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!
மலர் மாலைகள் சூடி, வண்ண கோலங்கள் இட்டு, கொண்டாட்டமாய் ஒளிரும் இந்த நவராத்திரியில், அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!
வண்ணக் கோலங்கள் பூத்திருக்க, மகிழ்ச்சி மனம் நிறைந்திருக்க, துர்கையின் அருள் நிறைந்திருக்க, நவராத்திரி வாழ்த்துகள்!
இந்த நவராத்திரியில் உங்கள் குடும்பத்தின் அனைத்து ஆசைகள் நிறைவேற வாழ்த்துகள்!
நவராத்திரியின் வண்ணங்களும், விளக்குகளும் உங்கள் வீட்டை மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் நிரப்பட்டும். இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!
முப்பெரும் தேவிகளின் நவ ரூபங்களை வணங்கி நவராத்திரியை நலமுடன் தொடங்குவோம்.
தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியை கொண்டாடுங்கள். நவராத்திரியில் தேவியின் அருளையும், ஆசியையும் பரிபூரணமாக பெறுங்கள். இனிய நவராத்திரி வாழ்த்துகள்!
ஒன்பது நாட்களான நவராத்திரியில் பெயர், புகழ், ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி, மனிதாபிமானம், அறிவு, பக்தி, சக்தி ஆகிய 9 ஆசிர்வாதங்களையும் துர்காதேயிடம் பெற்று மகிழ்ச்சியாக வாழுங்கள். இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!
நவராத்திரியின் ஒன்பது இரவுகளும் உங்கள் வாழ்வில் ஒளியை சேர்க்கட்டும்! இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்!
கொலுவின் அழகில் மனம் மகிழ, சக்தியின் அருள் வாழ்வில் நிறைய, நவராத்திரி நல்வாழ்த்துகள்!
அன்னை பராசக்தியின் அருள் அலைகள் உங்கள் இல்லம் முழுவதும் பரவி, இன்பமும் வெற்றியும் பெருகட்டும். இந்த நவராத்திரி திருநாளில், அனைத்து நலன்களையும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்.