
மனித வாழ்க்கை என்பது ஒற்றையடி பாதை போன்றது
தன் பலவீனத்தை மறைக்க தத்துவங்களையும் உபதேசங்களையும் செய்ய நினைப்பவன் சந்தேகிக்கப்படுவான்.
பொய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சம் வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மையே.
தெளிவான சிந்தனை மனஉறுதி சிறந்த செயல்முறை முதலீடுகளைக் கொண்ட எவரும் தொடர்ந்து வெற்றி பெறுவார்கள்.
நமக்குள் இரண்டு மூன்று அல்ல ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இந்தியாவின் ஒற்றுமை பாதுகாப்பு மற்றும் பலமான வாழ்வு குறித்து நாம் ஒரே குரலில் பேசவேண்டும்.
இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவை அமைப்பவர்கள் ஆகவே குழந்தைகளை வளர்க்கும் முறையை பொறுத்தே ஒரு நாட்டின் எதிர்காலம் அமையும்.
முன்னேற்றம் என்பது மனிதர்களின் பண்பால் வரையறுக்கப்படுவது.
புதிய சிந்தனைக்கு வழிவிட மறுப்பவர்கள் பண்பாட்டை பற்றி ஏதும் அறியாதவர்கள்.
அதிகாரம் தேவைதான் ஆனால் அறிவோடு கலந்த அதிகாரம்தான் சிறந்தது.
செயல் இல்லாத சிந்தனை அழிவைத் தரும்.
கோபத்தை அன்பாலும் தீமையை நன்மையாலும்தான் போக்க முடியும்.
மிரட்டி பணியவைக்க செய்யும் எந்த செயலும் வெறுக்கத்தக்கது.
வாழ்க்கை என்பது மனிதனுக்கு எதிராக மனிதன் நடத்துகிற இடைவிடாத போராட்டம்.
அச்சத்தில் இருந்து விடுபட்ட மனிதன்தான் சிந்தையிலும் செயலிலும் ஒழுங்கை கடைபிடிக்க முடியும்.
சமாதானத்துக்காக உழைப்பவர்கள் சமாதானம் நிலவுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் முயலவேண்டும்.
தயாள சிந்தையும் சகிப்புத்தன்மையும் அறிவும் சேராத பெரும் செல்வம் குப்பை கூளத்துக்கு சமம்.
உண்மையான நம்பிக்கை மட்டுமே ஒருவனுக்கு இருக்குமானால் அந்த நம்பிக்கை வைத்தே மலைகளை கூட அசைத்து விடலாம்.
பிறரை சந்தோஷப்படுத்த முயற்சி செய்யுங்கள் இன்பம் உங்களைத் தேடிவரும்.
அறிவாளிகள் தங்கள் அறிவைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்வதில்லை தாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு நடப்பதும் இல்லை.
தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை.