நேதாஜி தி கிரேட்!

விழா மேடையில்...
விழா மேடையில்...
Published on

நேதாஜி நாட்டிற்கு பெரும்பாடுபட்ட சுதந்திர வீரர்! இவரைப் பாராட்டி பலரும் புத்தகங்கள் எழுதியுள்ளனர். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் போலப் பலரும் உருவாகி வாழவேண்டும் என்ற நோக்கத்தினில் இவ்விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

20-07-2024 அன்று மேற்கு மாம்பலத்தில் பாணிக்கிரகா திருமண மண்டபத்தில் ஜெர்னலிசம் டிப்ளமா பட்டத்திற்கான சான்றிதழும், மதிப்பெண் சான்றிதழும் வழங்கக்கப்பட்டன. ஆறு மாதத்திற்கான ஆன்லைன் படிப்பு என்பதால் மாணவர்கள் பலரும் சான்றிதழில் தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியதைக் காணும்போது பத்திரிகை தர்மம் பேனாவின் வழியாக மலரும் என்பதை உணர முடிந்தது.

விழாவிற்கு கவுன்சிலர் உமா ஆனந்த் கலந்து விழாவைச் சிறப்பித்தார்.

தினமலர் லட்சுமிபதி அவர்களும், காலச்சக்கரம் நரசிம்மா அவர்களும் அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும் மாணவர்களை வாழ்த்தி வரவேற்றுப் பேசினர்.

காலச்சக்கரம் ஆசிரியர் நகைச்சுவை கலந்து இனிமையாக இன்றைய மக்களின் தேவையை விளக்கி மாணவர்களை ஊக்குவித்தார்.

விழாவிற்கு அணிகலனாக நேதாஜி போல ஒவ்வொரு மாணவ மணிகளும் மலர வேண்டும் என்ற நோக்கத்தில் ஜெயகிருஷ்ணன் எழுதிய நேதாஜி தி கிரேட் புத்தகம் தாமரை பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது. புத்தகம் குறித்து திருப்பூர் கிருஷ்ணன் விரிவாக எடுத்துரைத்தார். புத்தகம் குறித்தும் நேரமின்மை காரணமாக இரவு படிக்க வேண்டிய காலத்தையும் அவர் குறிப்பிட்டது பத்திரிகை நடத்துபவர்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற கோணத்தை உணர்த்தியது.

வாழ்வில் நேர்மையாக வாழ வேண்டியதன் காரணம், காந்தி காலத்தைய கருத்துகள், ஆவணப் படம் குறித்தும் பேசியது சுவாரசியமாக இருந்தன. குளிரூட்டப்பட்ட அறையின் இதமான காற்றை விட ஆறுதல் தரத்தக்க வகையில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும்வகையில் லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் இதழியலின் முக்கியத்துவம் குறித்தும் பத்திரிகையில் ஆற்றவேண்டிய கடமைகள் குறித்தும் பேசியது அனைவரையும் ஈர்த்தது. வாழ்க்கை அடிப்படை தத்துவத்தை அம்பானி குடும்பம் விழாவின்போது நடந்துகொண்ட முறை குறித்து கூறியபோது விழாவில் கூடியிருந்த கூட்டம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது.

வாழ்க்கையில் நாம் அன்றாடம் படிக்கும் பத்திரிகைகள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை சுதேசமித்திரன் தொடங்கி ரகமி, ராஜம் கிருஷ்ணன் என வரிசையாகத் தொட்டுக் காட்டி இதழியலின் முக்கியத்துவத்தை விவரித்தார். இன்று ஆளும் கட்சி ஒட்டுமொத்தமாக பத்திரிகைகள் வாயில் பூட்டு போடப்பட்டிருப்பதையும், சவுக்குகள் மௌனமாக இருப்பதைக் குறித்து பூடகமாகப் பேசியது அவையினரால் மௌனமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையும் படியுங்கள்:
மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்...!
விழா மேடையில்...

டிப்ளமா சான்றிதழ் பெற்ற மாணவர்கள் தாம் படித்து வாங்கிய பட்டம் குறித்தும் இனி பத்திரிகைத் துறைக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்தும் பேசினர். இனியாவது பாரதிக்குக் கிடைத்த எழுத்துரிமை கிடைக்குமா என்ற கோணத்தில் அங்கிருந்த சான்றோர் நிறைந்த அவையோர் முகத்தில் பல்வேறுவிதமான மெய்ப்பாடுகளையும் காட்டிக்கொண்டிருந்தனர்.

அனைவரையும் கவரும் வகையில் விருந்தினர்களுக்கு ஏற்ற வகையில் தமிழ்ப் பண்பாட்டின் விருந்தோம்புதல் சிறப்பான முறையில் நடைபெற்றது. விழா நடத்த குளிரூட்டப்பட்ட அறைகளை அளித்து நிகழ்ச்சியில் பங்கு பெற்ற இடத்தின் உரிமையாளரைப் பாராட்டி நன்றியுரையுடன் சிறப்பாக முடிவடைந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com