meta property="og:ttl" content="2419200" />

வேதியியலாளர்கள் கொண்டாடும் மோல் தினத்தின் சிறப்பு!

அக்டோபர் 23: மோல் தினம்!
 Mole Day
Mole Day
Published on

வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும், ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும். இந்நாளை மோல் நாள் (Mole Day) என்கின்றனர். அவர்கள் அமெரிக்க முறையில் 6:02 10/23 எனக் குறிக்கிறார்கள். நேரம், நாள் ஆகியன அவகாதரோ மாறிலியைக் (6.02×1023) கொண்டு குறிக்கப்பட்டது. அவகாதரோ மாறிலி என்பது ஒரு மோல் வேதிப்பொருளில் காணப்படும் துணிக்கைகளின் (அணுக்கள் அல்லது மூலக்கூறுகள்) எண்ணிக்கை ஆகும்.

அதாவது, மோல் அல்லது மூல் (Mole) என்பது வேதியியலில் ஒரு பொருள் எவ்வளவு உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அலகு. இது அடிப்படையாகக் கருதப்படும் அனைத்துலக முறை அலகுகளில் ஒன்று. தமிழில் மோல் அல்லது மூல் என்றும் உரோமன் / இலத்தீன் எழுத்தில் Mol என்றும் குறிக்கப்பெறுகின்றது. மோல் என்னும் பெயர் 1893 ஆம் ஆண்டில் இடாய்ச்சுலாந்து வேதியியலாளர் வில்ஹெம் ஆஸ்ட்வால்டு (Wilhelm Ostwald) என்பவர் Molekül என்னும் இடாய்ச்சு மொழிச்சொல்லில் இருந்து உருவாக்கி 1897 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திய சொல்லாகும்.

ஒரு பொருளின் ஒரு மோல் என்னும் அளவு, அப்பொருளின் அடிப்படைக் கூறுகளால் (அணு, மூலக்கூறு) கணக்கிடும் பொழுது, துல்லியமாக 12 கிராம் தூய கரிமம்-12 என்னும் பொருளில் எவ்வளவு அணுக்கள் உள்ளனவோ அதே எண்ணிக்கையில் உள்ள அளவு ஆகும். அதாவது ஒரு மோல் தூய 12C மிகச்சரியாக 12 கிராம் இருக்கும். ஒரு மோலில் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கையை அவோகாடரோ எண் (Avogadro constant) என்பர். இந்த அவோகாடரோ எண், 6.02214179 (30)×1023 மோல்−1. ஆகும். அவோகாடரோ எண்ணை 6.022x1023 (மோல்)−1 என்று குறிப்பிடலாம்.

கரிமம் என்னும் பொருளே ஆயினும், அதில் கரிமம்-14, கரிமம்-12 போன்ற ஓரிடத்தான்கள் இருக்கக்கூடும். ஒரு பொருள் தனி அணுக்களால், ஒரே வகையான ஓரிடத்தான்களால் ஆனதாயின் ஒரு மோல் என்னும் அளவு கீழ்க்காணுமாறு அறியப்படும்:

1 மோல் 12C = 6.02214 x1023 12C அணுக்கள் = 12 கிராம்

1 மோல் 16O = 6.02214 x1023 16O அணுக்கள் = 15.9949 கிராம்

இதையும் படியுங்கள்:
பனிச்சிறுத்தைகளைப் பாதுகாக்க நீங்களும் உதவ முடியும்! எப்படி?
 Mole Day

மோல் என்பது அனைத்துலக முறை அலகில் பொருளொன்றின் எண்ணிக்கையை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது. பொருளின் எண்ணிக்கையை அளவிடுவதால் இது திணிவிலிருந்தும் வேறுபட்ட ஒரு கணியமாகும். பொருளொன்றின் அடிப்படைத் துகள்களின் எண்ணிக்கை அவகாதரோ எண் அளவினதாயின் அதன் அளவு 1 மோல் எனப்படும். இதன் குறியீடு Mol ஆகும்.

அமெரிக்க ஐக்கிய நாடு, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் உயர்நிலைப் பள்ளிகளில் வேதியியல் அல்லது மோல் தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இந்நாளில் நடத்தப்படுகின்றன. பல பள்ளிகளில் இக்காலப்பகுதியை மோல் வாரமாகவும் கொண்டாடுகின்றன. அமெரிக்க வேதியியல் குமுகம் தேசிய வேதியியல் வாரமாகக் கொண்டாடுகின்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com