பொங்கல் பண்டிகை: வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சர்தார் படேல் சிலை!

பொங்கல் பண்டிகை: வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சர்தார் படேல் சிலை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

குஜராத்தில் உருவாக்கப்பட்ட சர்தார் படேலின் சிலைதான் உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றூ ற Statue of Unity என்றூ போற்ரப்படுகிறது. இந்த சிலை உத்தராயணம் அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது..

தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகின் மிக உயரமான இந்தச் சிலை, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. அதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, பலரால் பகிரப்படுகிறது.

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் சரோகவர் அணை பகுதியில் கட்டப்பட்டுள்ள, பிரமாண்ட Statue of Unity எனப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையைக் காண, நாள்தோறும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர் என்பது குறீப்பிடத் தக்கது..

logo
Kalki Online
kalkionline.com