
மொழி என்பது உலகளாவிய விஷயம். ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் மொழிகள் மாறுபடுகின்றன.
நமது தமிழ் மொழிக்கு ஈடாக எதுவும் இல்லையென்றாலும், பல்வேறு மொழிகளை நாம் கற்றுக்கொள்வதே நமக்கு நல்லது.
அதன்படி நமது மொழி தொியாதவர்கள் நம்மிடம் பேசும் போது அதை மொழிபெயர்ப்பு செய்ய தகுதியான நபர் தேவைப்படுவாா்.
பலர் வெவ்வேறு மொழிகளில் கட்டுரை போன்ற, கலை, இலக்கியம், தொடர்பாக ஒரு மொழியில் எழுதி, புத்தக வடிவில் போடும் நிலையில் அதை வெவ்வேறு மொழிகளில் மொழி பெயர்க்க தகுதியான நபர்கள் பலர் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. அந்த பணியானது மிகவும் முக்கியம் வாய்ந்தது.
மொழிபெயர்ப்பு செய்வது பொிதல்ல, இருப்பினும் அது அனைவரையும் இலகுவாக சென்றடையும் வகையில் அதன் பதம் மாறாமலும், அதன் சொல்லாடல் தன்மை மாறாமலும், பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ள வேண்டும்.
அத்தகைய மொழி பெயர்ப்பாளர்களின் சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30ம் நாள் சர்வதேச மொழிபெயர்ப்பு (International Translation Day) தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
மொழி பெயர்ப்பாளர்களின் புரவலராக கருதப்படும், புனித ஜெரோம் அவர்களின் நினைவாக மேற்படி தினம் கொண்டாடப்படுகிறது.
கலை, இலக்கியம், நாவல், புராணம் அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய பல்வேறு எழுத்தாக்கங்களை பிற மொழிகளில் இருந்து பல்வேறு, மற்றும் நமது மொழிக்கேற்ற வகையில் அதன் தன்மையும், பதமும், மாறாமல் மொழிபெயர்ப்பு செய்வது மிகவும் கவனமான பணியாகும்.
அதேபோல நமது மொழி தொியாத பல்வேறு தலைவர்கள் நமது ஊர்களுக்கு வந்து மேடையில் பேசும் போது அதை சரிவர மொழிபெயர்க்கிறாா்கள்.
அதற்கு ஒரு தகுதியானவர்கள் வேண்டுமே!மொழிபெயர்ப்பு செய்வது என்பது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய பணிகளுள் ஒன்றாகும். அந்த பணியை நாம் அங்கீகரிக்க வேண்டும். 2018ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் இந்த தினம் அங்கீகரிகப்பட்டது.
மொழி பெயர்ப்புகளின் புரவலரான புனித ஜெரோம் கிபி 420ல் செப்டம்பர் 30ம் நாளில் மறைந்தாா். அவரின் நினைவாக சர்வதேச மொழி பெயர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் நாமும் நமது வாாிசுகளுக்கு பல்வேறு மொழிகளை கற்கும் வாயப்புகளை உருவாக்குவோம். பல்வேறு மொழிகள் தொிந்தால் உலகின் எந்த எல்லைக்கும் போய்வருவது சாத்தியமாகுமே!