அமெரிக்க அதிபர் தேர்தல் முறையை தெரிந்து கொள்வோமா?

Election...
Election...
Published on

லகின் வலிமைமிக்க ஜனநாயக நாடு அமெரிக்கா. இங்கு 1788 லிருந்து நான்காண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல் முறை மிக நீண்டது. அதைப் பற்றிய பதிவுதான் இக்கட்டுரை.

மக்கள் ஓட்டளித்தாலும் அவர்கள் அதிபரை நேரடியாக தேர்வு செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு கட்டமும் ஏற்கனவே திட்டமிட்ட நாட்களில்தான் நடக்கும். பதவிக்காலம் முடியும் ஜனவரிக்கு முன் வரும் முந்தைய ஆண்டின் நவம்பர் மாதத்தில் முதல் திங்கள் கிழமைக்கு அடுத்து வரும் முதல் செவ்வாய்க்கிழமைதான் ஓட்டுப்பதிவு நடக்கிறது. அதன்படி  நேற்று அங்கு நடந்தது அறுபதாவது தேர்தல்.

காலை 7 அல்லது 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கும். அமெரிக்க குடியுரிமை பெற்ற குறிப்பிட்ட மாகாணத்தில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டோர் ஓட்டளிக்கலாம். குற்ற பின்னணி உள்ளவர்கள் ஓட்டளிக்க சில மாகாணங்களில் தடை உள்ளது.

2020 தேர்தலில் 66% மக்கள் ஓட்டளித்ததே கடந்த 100 ஆண்டுகளில் அதிகமாகும். அதிபர் தேர்தலில் மக்கள் அதிபர் வேட்பாளருக்கு ஓட்டளித்தாலும் அதன் அடிப்படையில் அதிபர் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் அளிக்கும் ஓட்டுகள் ஒவ்வொரு மாகாணத்திலும் குறிப்பிட்ட கட்சிக்கு எத்தனை பிரதிநிதிகள் கிடைப்பது என்பதை உறுதி செய்யும். இவ்வாறு மாகாணங்களில் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் ஓட்டளித்து அதிபரை தேர்வு செய்கின்றனர். இதுவே எலக்டோரல் காலேஜ் எனப்படுகிறது.

தற்போது அமெரிக்காவில் 538 எம்பிக்கள் உள்ளனர். அதன்படி 538 எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்கள் அளிக்கும் ஓட்டுகளின் அடிப்படையிலேயே அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்வு செய்யப்படுபவர். மொத்தம் 270 பேரின் ஆதரவு பெற்றவரே வெற்றியாளர். இதில் மக்கள் அளிக்கும் ஓட்டுகளே பாப்புலர் ஓட்டு என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் பாப்புலர் ஒட்டு அதிகம் பெற்றவரே அதிபராவார் எனக் கூற முடியாது. எலக்டோரல் காலேஜ் பிரதிநிதிகள் அளிக்கும் ஓட்டுகளே வெற்றியாளரை நிர்ணயிக்கும்.

இதையும் படியுங்கள்:
நெகடிவ்க்குள் இருக்கும் பாஸிடிவை கண்டுகொண்டால் வெற்றிதான்!
Election...

வேறு சில கட்சிகளின் சார்பில் சிலர் போட்டியிட்டாலும் அமெரிக்காவில் இரண்டு கட்சிகளே பிரதானமாக உள்ளன. அதன்படி ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலாஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இது அறுபதாவது தேர்தலாக இருந்தாலும் வர இருப்பவர் 47வது அதிபர். இருமுறைக்கு மேல் எவரும் அதிபராக இருக்க முடியாது. மொத்த வாக்காளர்கள் 24 கோடியே 4 லட்சம். முன்கூட்டியே ஓட்டு போடும் வசதியும் இங்கு உண்டு .அதன்படி 7.5  கோடி பேர் ஓட்டு போட்டுள்ளனர்.

வழக்கமாக தேர்தல் நாளிலேயே முடிவுகள் தெரியவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com