

செக்கிழுத்த செம்மல் என்றும் கப்பலோட்டிய தமிழன் என்றும் புகழப்படும் வ.உ.சிதம்பரனார் நினைவு தினம் இன்று. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த வ.உ.சி.யின் சில நினைவுகளை இப்பதிவில் காண்போம்.
‘சுதந்திரமே எனது உயிா் மூச்சு’ என வாழ்ந்து மறைந்த வ.உ.சி.யாரே!
திருநெல்வேலி சீமையிலே பிறந்து வளா்ந்த வணங்காமுடியே!
ஒட்டப்பிடாரம் கண்டெடுத்த கலங்கரை விளக்கமே!
உலகநாதன்பிள்ளை - பரமாயி தம்பதியர் பெற்றெடுத்த நல்லவரே!
சட்டம் பயின்று சந்துகளில் சுதந்திர வேள்வி வளா்த்த வரலாறே!
5.9.1872ல் அவதரித்து 18.11.1936ல் மறைந்த மாமனிதமே!
அகவை அறுபத்தி நான்கு வரை சுதந்திரக் காற்றை சுவாசித்த சுக்கிரனே!
தமிழ், ஆங்கிலம் மொழியில் உரையாடிய ஒப்பிலாமணியே!
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்த திரைகடல் ஓடிய திரவியமே!
வழக்காடுவதில் வல்லமை பெற்ற பெருந்தகையே, பேராண்மையே!
சுதந்திர தாகம் கொண்ட சுதந்திர வேட்கையின் நாயகமே!
ஆங்கிலேயர்களுக்கெதிராய் வணிகம் செய்ய வழிவகை செய்த செம்மலே!
‘வந்தால் கப்பலோடு, இல்லையேல் கடலோடு’ என சூளுரைத்த சூத்ரதாாியே!
கப்பலோடு வந்து வணிகம் வளர்த்த விளைநிலமே!
தூத்துக்குடிக்கும், இலங்கைக்கும் வணிகம் செய்த வஞ்சிக்கோட்டையே!
பாலகங்காதர திலகரின் சீடராய் சீறிப்பாய்ந்த சீவலப்போியே!
திருநெல்வேலியில் ஆளுமையோடு வளர்ந்த திறமைமிகு தலைமைப் பண்பே!
திறன்மிகு எழுத்தால் இலக்கிய நூல்கள் படைத்திட்ட பகலவனே!
பாரதத் தாய் தத்தெடுத்த சுதந்திர வேட்கை கொண்ட வேங்கைப் புலியே!
வழக்காடும் திறன் கொண்ட கொள்கை நெறியே குணக்குன்றே!
கப்பலோட்டிய தமிழனாய் தடைகள் பல கடந்த தவப்புதல்வரே!
ஆங்கிலேயர்களால் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற தர்மநெறியே!
செக்கிழுத்த செம்மலே, கப்பலோட்டிய தமிழரே, தகைசால் விருதே!
கல்லும் மணலும் கலந்த கூழே உணவாய் அருந்திய அருட்பெருஞ்ஜோதியே!
தண்டனை கைதியாய் மாடுகள் போல கைகளால் செக்கிழுத்த செம்மலே!
உதிரம் சொட்ட சொட்ட ஆங்கிலேயரிடம் தண்டனை பெற்ற அசையா வீரமே!
ஆங்கிலேயர்களுக்கு அதிரடி காட்டிய ஆளுமைமிகு ஆதவனே!
வழக்கறிஞராய், சுதந்திரப் போராட்ட சுடராய் பன்முகம் காட்டிய பரம்பொருளே!
நீா் சிந்திய ரத்த சுவாசத்தை நாங்கள் சுதந்திரமாய் சுவாசம் செய்கின்றோம். என்ன தவம் செய்திட்டோம் உம்மை தியாகியாய் அடைய. வாழ்நாள் உள்ளவரை வ.உ.சி. உந்தன் பெருமையோடு, நினைவுகளோடு, உமது நினைவு நாளில் உமது காலடி மண்ணோடு தொடா்கிறோம்.