அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

பெண்கள்
பெண்கள்
Published on

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?

படித்துவிட்டோம், பட்டம் வாங்கிவிட்டோம்,

பட்டம் வாங்கி விட்டோம், பட்டம் காற்றில் பறக்கவில்லை,

மாறாக பாலியல் வட்டத்திற்குள் மாண்டு விட்டோம்

மீள முடியவில்லை !

என்ன பாவம் செய்தோம்

பாரதி,

என்ன பாவம் செய்தோம்?

புதுமைப்பெண்களாய் வலம் வருவது பாவமா?

சுதந்திரம் கிடைத்தும்

காமக்கொடூரன்களின்

வேட்டையில் சிக்கிய மான்களாகி விட்டோமே?

எங்களில்தான் எத்தனை சக்தி,

எத்தனை முகங்கள்,

எத்தனை அவதாரங்கள்,

தாயாய் ஒரு முகம்,

சகோதரியாய் ஒரு முகம்,

தாரமாய் ஒரு முகம் ,

இப்படி எத்தனை எத்தனை அவதாரங்கள் ,

வரதட்சணை கொடுமை,

மாமியாா் கொடுமை தாங்கிவிட்டோம்

அதற்கும் மேலாய் பாலியல் கொடுமை?

முடியவில்லை ,

முடிவே இல்லை?

ஏனிந்த கொடுமை?

எத்தனை கோடி துன்பம் வைத்தாய் இறைவா ?

பராசக்தியாய் பாா்க்க வேண்டிய எங்களை சீரழிக்கும் ஆண் பாவங்களே

உங்கள் பாவங்களுக்கு பாவ மன்னிப்பே இல்லை!

தாய் வயிற்றில் பிறந்த உங்களுக்கு

தாய், தாரம், அக்காள் தங்கை... தூய உறவுகள் புரியாமல் போனதேன்?

சமுதாய வீதிகளில் சுதந்திரமாய் பழக முடியாமல் பரிதவிக்கிறோம்,

சாந்த லெட்சுமியாய், தனலெட்சுமியாய் வாழத்தான் விரும்புகிறோம்!

சாது மிரண்டால் காடு கொள்ளாது

மாதுக்களாகிய நாங்கள் திரண்டால்?

எங்களை பத்ரகாளியாய் அவதாரம் எடுக்க வைத்து விடாதீா்கள்!

உணர்ந்து பாருங்கள் உன்மத்தம் பிடித்தவர்களே!

நாங்கள் பத்ரகாளியாகி விடுவோம், தவறில்லை

எங்களின் உஷ்ணப் பெருமூச்சுக்காற்றில் வீசும்

அக்னி ஜுவாலையில் நீங்கள் பொசுங்கி விடுவீா்கள்!

பாரதி, உன் பாடல்கள் மேடையில் மட்டுமே பேசப்படுகின்றன,

நின் கனவு மெய்ப்படவில்லை பாரதி!

நல்ல தோா் வீணை செய்தே நலம் கெட புழுதியில் எறிந்து விட்டாா்களே!

பாரதி

நீ கண்ட புதுமைப் பெண்ணை பாா்க்க மீண்டும் வா,

மீண்டு வா... மீளாளாத்துயரின் பிடி விலக்க

எங்களை மீட்க வா பாரதி, வா!

இதையும் படியுங்கள்:
Women's day Quotes: அறிஞர்களின் மகளிர் தின பொன் மொழிகள்!
பெண்கள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com