தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1-ம் தேதிமுதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது.அதனைத் தொடர்ந்து இன்றுமுதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் திறக்கப்படுவதாக தமிழக அர்சு அறிவித்தது.

தமிழக பள்ளிகளீல் காலை முதல் மாலை வரை முழுநேரமும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த ஓரிரு நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கனமழை காரணமாக இன்று வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, குமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com