

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உருவாக பலரும் முனைப்புடன் செயல்பட்டுள்ளனர். அந்த வகையில், பொதுவாக ஒரு சட்ட முன்மொழிவை உருவாக்குவது ஒரு நாட்டிற்கே வலு சோ்க்கும்.விஷயமாகும். அப்படி அந்த அரசியல் அமைப்பு சட்டம் முன்மொழிவை அமைத்தவர், அதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக பி.ஆா்.அம்பேத்கர் தோ்வு செய்யப்பட்டாா்.
அதன் வழியில் அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொண்ட நாளாய் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ம் நாள் தேசிய சட்ட தினமாக (National Constitution Day) கொண்டாடப்படுகிறது. இதில் பி.ஆா்.அம்பேத்கரின் பொிய பங்களிப்பை பாராட்டும் விதமாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் அரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்ட தினம் என்பதால் இது சிறப்பு வாய்ந்த நாளாகப் பாா்க்கப்படுகிறது.
பி.ஆா்.அம்பேத்கர் மகாராஷ்டிராவில் பிறந்தவர். நல்ல கல்வியாளர், சுதந்திரஉணர்வு கொண்டவர், சட்ட மேதை, தலித் மக்களுக்காகப் போராடியவர். பொதுவாக, பன்முகத்தன்மை கொண்ட வல்லுனர் என்றே இவரைச் சொல்லலாம். இந்திய அரசியல் அமைப்பு என்பதை ஜனநாயகம், சுயாட்சி, நாட்டின் விடியல் என்றே கருதலாம். இனி, இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறை சற்று காண்போம்.
13.12.1946ல் நேருவால் இதற்கு தீா்மானம் கொண்டு வரப்பட்டது.
22.1.1947ல் தீா்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
22.7.1947ல் இந்திய தேசியக்கொடி அறிமுகம்.
அரசியல் அமைப்பு சட்டம் தயாாிக்க ஏழு போ் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக பி.ஆா்.அம்பேத்கர் நியமிக்கப்பட்டாா்.
29.8.1947ல் அந்தக் குழு அமைக்கப்பட்டது.
26.11.1949ல் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
15.8.1947ல் இந்திய சுதந்திரம்.
24.1.1950ல் ‘ஜன கன மன’ தேசிய கீதமாகவும், நாட்டுப்பண்ணாக வந்தே மாதரமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் 26.1.1950ல் குடியரசு தினமானது.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக டாக்டர் இராஜேந்திர பிரசாத் மற்றும் துனைத்தலைவராக சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் பி.ஆா்.அம்பேத்கர் ஆவாா்.
ஆக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவான நவம்பர் 26ம் நாளில் நாமும் நமது பங்களிப்பாய் சட்டத்தை மதிப்போம், இந்தியா வல்லரசாகப் பாடுபடுவோம்!