
உலக வன விலங்கு தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 4 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் விலங்குகளின் அனைத்து வாழ்க்கை முறைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டு உலகின் அனைத்து இடங்களிலும் முக்கிய நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலரும் விலங்குகளின் தெய்வமாக மதிக்கப்படுபவருமான பிரான்சிஸ் அசிசி என்பவரின் வணக்க நிகழ்வு அக்டோபர் 4ல் வருவதால் இந்நாள் வன விலங்கு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக வன விலங்கு தினத்தை சைனாலஜிஸ்ட் ஹென்ரிச் ஜிம்மர் மேன் உருவாக்கினார். அவர் முதல் உலக விலங்கு தினத்தை மார்ச் 24, 1925 அன்று ஜெர்மனியின் பெர்லினில் உள்ள அரண்மனை விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்தார். இந்த முதல் நிகழ்வில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் நிகழ்வின் பரவலர் புனித அசிசியின் புனித பிரான்சிசின் பண்டிகை நாளோடு இணைவதற்காக இந்த நிகழ்வு முதலில் அக்டோபர் 4ம் தேதி திட்டமிடப்பட்டது. இருப்பினும், அந்த இடம் அந்த நாளில் கிடைக்கவில்லை. அதன் பின் இந்த நிகழ்வு அக்டோபர் 4ம் தேதி முதல் முறையாக 1929ல் மாற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜிம்மர் மேன் உலக விலங்கு தினத்தை மேம்படுத்துவதில் அயராது உழைத்தார். இறுதியாக மே, 1931ல் இத்தாலியில் நடந்த சர்வதேச விலங்கு பாதுகாப்பு காங்கிரஸ் மாநாட்டில் அக்டோபர் 4ல் உலக விலங்கு தினத்தை உலகளாவியதாக மாற்றுவதற்கான அவரது முன்மொழிவு ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த தினம், காடுகள் உயிரினங்களுக்கு ஆக்ஸிஜன், உணவு, மருந்து ஆகிவற்றுடன் மனித வாழ்வாதாரத்திற்கும் மிக அவசியமானவை என்பதை உணர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தையும் காடுகள் அழிப்பால் ஏற்படும் தீமைகளையும், மக்களுக்கு எடுத்துரைக்க இந்த வன தினம் பயன்படுத்தப்படுகிறது.
வனங்களை பாதுகாக்கவும் காடழிப்பை தடுக்கவும், மரம் நடுதல் போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் இந்த நாளில் மேற்கொள்ளப்படுகின்றன. காடுகளின் வளத்தை பேணிப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு, உயரிய சுற்றுச்சூழலை விட்டுச் செல்வதற்கான சமூக பொறுப்புணர்வை வலியுறுத்தும் ஒரு நாளாகவும் இது அமைகிறது.
விலங்குகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் நலன் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே அமைதியான சக வாழ்வை மேம்படுத்துவது சூழ்நிலையை ,சமநிலையை பேணுவதற்கு விலங்குகளின் பாதுகாப்பு அவசியம் என்பதே வலியுறுத்துவது. வீட்டு வளர்ப்பு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகள் உட்பட அனைத்து விலங்குகளையும் பாதுகாப்பது.
இந்தியாவின் வன பாதுகாப்பு சட்டம் 1980ம் ஆண்டு இயற்றப்பட்டது. இது வன விலங்குகளை பாதுகாப்பதற்கும் காடழிப்பை கட்டுப்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான சட்டம் ஆகும். இந்த சட்டம் 1988ம் ஆண்டிலும் திருத்தப்பட்டது. முக்கியமாக வனவிலங்கு சரணாலயங்கள் குறித்த சட்டங்கள் முக்கியமானதாகும்.