தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் ஆன்மிக ஒற்றுமையே!

டிசம்பர் 6, டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்
Dr. Ambedkar Memorial Day
Dr. Ambedkar
Published on

ந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று. இத்தினத்தில் சமூக மேம்பாட்டுக்காக அவர் கூறிச் சென்ற சில சிந்திக்கத்தக்க சீர்திருத்த வரிகளை இப்பதிவில் காண்போம்.

1. நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும்போது, உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது எனது கடமை!

2. பலி பீடத்தில் வெட்டப்படுபவை, ஆடுகள்தான், சிங்கங்கள் அல்ல. நீங்கள் சிங்கங்களாக இருங்கள்!

3. ஒரு லட்கியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்!

4. எப்போதும் ஊக்கமாக சமூக சேவை செய்தால் உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாக சாதிக்க முடியும்!

இதையும் படியுங்கள்:
மன்னனை திகைக்க வைத்த தத்தாத்ரேயரின் 24 ஆசான்களும் காரணமும்!
Dr. Ambedkar Memorial Day

5. தீண்டாமை என்பது சாதி துவேஷத்தில் இருந்து வளர்கிற ஒன்று. சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பதென்பது நடக்கக்கூடியது அல்ல!

6. சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்பு மணமே. வேறு எவற்றாலும் சாதியை கரைக்க முடியாது!

7. ஒரு தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் ஆன்மிக ஒற்றுமையே. இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனத்தவரே!

8. ஒரு அடிமை, அவன் தான் அடிமை என்பதை முதலில் உணர்ந்த பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்!

9. எவன் ஒருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல் எதையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றாேனோ அவனே சுதந்திர மனிதன்!

10. பணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனிதர்களாக வாழ்வதற்காகவுமே போராடுகிறோம்!

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் கடல் சக்தி பற்றி உங்களுக்குத் தெரியாத ரகசியங்கள்!
Dr. Ambedkar Memorial Day

11. தன்னைத்தானே தாழ்த்திக் கொள்பவன் போல தரணியில் மோசமானவன் எவனும் இல்லை!

12. மாபெரும் இலட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!

13. மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்கு உட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்!

14. உலகில் யாரும் தெய்வீக குணங்களுடன் பிறப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துதான் முன்னேற்றமோ, வீழ்ச்சியோ ஏற்படுகிறது!

15. மாபெரும் இலட்சியத்தையும் வெற்றியில்  நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com