திருமலை திருப்பதி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு தேதி 6 மாதங்கள் வரை செல்லுபடி!

திருமலை திருப்பதி தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு தேதி 6 மாதங்கள் வரை செல்லுபடி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஏழுமலையானை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு செய்து வரமுடியாத பக்தர்கள், ஆன்லைனில் 6 மாதங்களுக்குள் வேறு தேதி மாற்றி வந்து தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்ததாவது:

திருமலை திருப்பதியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைப்பது குறித்து தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதையடுத்து அலிபரி வழித்தடத்தில் நடைபாதை சீரமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு இன்று முதல் திருமலை தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேசமயம் நவம்பர் 18-ம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்கனவே ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள், கனமழை காரணமாக வரமுடியாத பக்தர்கள் அதே டிக்கெட்டை பயன்படுத்தி வரும் 30-ம் தேதி வரை தரிசனம் செய்யலாம் மேலும் நவம்பர் 30 வரை வர முடியாதவர்கள் 6 மாதங்களுக்குள்ளாக வேறு தேதியில் தரிசனம் செய்யும் விதமாக இணையதளத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com