வாழ்க்கையின் எதிர்காலத்தை உயர்த்தும் அறிஞர்களின் சிக்கன மந்திர பொன்மொழிகள்!

அக்டோபர் 30, உலக சிக்கன தினம்
World Thrift Day Scholars Mottos
World Thrift Day
Published on

1924ம் ஆண்டு இத்தாலி நாட்டில் நடைபெற்ற முதல் உலக சிக்கனப் பேரவையில் அக்டோபர் 31ம் நாள் உலக சிக்கன தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. சேமிப்பை பற்றியும், தங்கள் பணத்தை சேமிக்க  வேண்டும் என்ற கருத்தை தெரிவிப்பதற்காக உலக சிக்கன நாள் உருவாக்கப்பட்டது. பொருளாதார பாதுகாப்பையும் ஊக்குவிப்பதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது. 1984ம் ஆண்டு இதே நாளில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி மரணம் அடைந்ததால், இந்தியாவில் இந்நாள் அக்டோபர் 30ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் அறிஞர்கள் சிலரின் சிக்கனப் பொன் மொழிகள் சிலவற்றை குறித்து இப்பதிவில் காண்போம்.

சிக்கனமாய் இருத்தல் வாழ்வாகிய போர்க்களத்தில் பாதி வெற்றி பெற்றது போல் ஆகும். சம்பாதிப்பது என்பது செலவு செய்வதைப் போல அவ்வளவு கடினமான காரியம் அன்று. - சதி

சிக்கனம் இல்லையேல் யாரும் செல்வந்தராக முடியாது. சிக்கனம் இருந்தாலோ வெகு சிலர் கூட தரித்திரர் ஆகார் - ஜான்சன்

சிக்கனம் அதுவும் ஒருவித வருமானமே - லெனிக்கா

இதையும் படியுங்கள்:
ஒரு தமிழரின் கண்டுபிடிப்பால் விண்வெளியில் வரலாறு படைத்த அமெரிக்கா!
World Thrift Day Scholars Mottos

வருமானத்தை விட குறைவாக செலவு செய்ய அறிந்து விட்டால் ரசவாத ரகசியத்தை அடைந்து விட்டவர் ஆவோம். - பிராங்கிளின்

தந்தை மகற்காற்றும் உதவி அதிகம் வைத்துப்போவது அன்று; குறைவானதை கொண்டு சரியாக வாழக் கற்பிப்பேதே. - பென்

சிக்கனம் என்பது வருவாய்க்கு தக்க செலவு செய்தல். அது ஒரு அறமன்று; அதற்கு அறிவும், திறமையும் தேவையில்லை. - பென்

செலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வினன். அவனே இரண்டு வித இன்பமும் துய்ப்பவன். - ஜான்சன்

சிக்கனமாக இல்லாதவன் சாமர்த்தியசாலியாக இருக்க முடியாது. சாதுரியமாக குடித்தனம்  நடத்த இயலாது. - பேகனஸ் பீல்டு

அதிக செலவும் முட்டாள்தனமான சிக்கனமும் தீமையே விளைவிக்கும் - ஹென்றி போர்டு

சின்னஞ்சிறு செலவுகளைப் பற்றியும் கவனமாய் இரு. அடித்தளத்தில் உள்ள சிறு ஓட்டை ஒரு பெரிய கப்பலையே மூழ்கடித்து விடலாம். - பிராங்கிளின்

இதையும் படியுங்கள்:
ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த அனிமேஷன் தினத்தின் வரலாறு!
World Thrift Day Scholars Mottos

* வாழ்க்கையில் சிக்கனமாக இருப்பது பாதி வெற்றிக்குச் சமம்.

* சேமிப்பு செழித்து வளர சிறந்த வழி சிக்கனம்.

* வரவு அறிந்து செலவு செய்வதே சிக்கனம். செலவு அறிந்து வரவை சேமிப்பது நற்குணம்.

* சிக்கனம் வீட்டை காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்.

* சிக்கனம் என்பது கஞ்சத்தனம் இல்லை, செலவு செய்யும் விதம்.

* எதிர்கால பொறுப்புடன் செயல்படுவது சிக்கனம்.

* சிக்கனமும் சேமிப்பும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இரு கருவிகள்.

* அவசிய அத்தியாவசியத் தேவைகளைத் தாண்டி மீதியைச் சேமித்து வைத்தல்தான் சிக்கனம்.

சிக்கனத்தை கடைப்பிடிப்போம்! சேமிப்பை உயர்த்துவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com