உதயநிதிக்கு கேக் ஊட்டிய நடிகர் வடிவேலு! 

உதயநிதிக்கு கேக் ஊட்டிய நடிகர் வடிவேலு! 
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

–லதானந்த் 

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ்  நடிக்கிறார்.நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ஒளிப்பதிவு –  தேனி ஈஸ்வர். 

தற்போது சேலத்தில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு,படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை இயக்குனர் மாரி செல்வராஜ்,நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் உட்பட பலருடன் வடிவேலு மகிழ்ச்சியுடன் கேக் வெட்டிக்  கொண்டாடினார்.  

இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு அவர் கேக் ஊட்டியது குறிப்பிடத் தக்கது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் வடிவேலுவிற்கு தெரிவித்தனர். 

logo
Kalki Online
kalkionline.com