திருச்சிற்றம்பலம்; சிறப்பற்ற கதை அம்பலம்! 

திருச்சிற்றம்பலம்; சிறப்பற்ற கதை அம்பலம்! 
Published on

-  ராகவ் குமார்  

போலீஸ் இன்ஸ்பெக்டர்(பிரகாஷ்ராஜ் ) மகனான திருச்சிற்றம்பலம் (தனுஷ் ) தனது அம்மா, தங்கை மரணங்களுக்கு அப்பா தான் காரணம் என்று எண்ணி அப்பாவிடம் பேசாமல் இருக்கிறார்.அதே வீட்டில் வசிக்கும் பால்ய கால தோழியான நித்தியா மேனன் தனுஷின் சுக துக்கங்களில் பங்கு கொள்கிறார்.    

தனுஷிற்கு நித்யா மீது காதல் வரவில்லை. மாறாக வேறு சில பெண்கள் மீது காதல் வருகிறது.இப்பெண்கள் தனுஷை காதலிக்க மறுக்கிறார்கள். இறுதியாக நித்தியாவின் காதலை புரிந்துஏற்று கொண்டு திருமணம் செய்து கொள்கிறார்.       

இதுதான் மித்ரன் R ஜவஹர் டைரக்டஷனில் தனுஷ், நித்தியா மேனன் நடித்து வெளி வந்துள்ள  திருச்சிற்றம்பலம் படத்தின் கதை! 

பல ஆண்டுகளுக்கு முன்னால் சினிமாவில் சொன்னதோழியா? காதலியா? என்ற ஒன் லைன் கதையை, பல படங்களில் சொல்லபட்ட விஷயத்தை எந்த வித சுவாரசியமும் இல்லாமல், திரைகதையில் பரபரபரப்பையும் காட்டாமல் தந்திருகிறார் டைரக்டர். 

மேலும்  தனுஷ், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன் என அனைவரும் நன்றாக நடித்து இருந்தாலும் இதை விட சிறப்பான இவர்களின் நடிப்பைபல படங்களில் பார்த்து விட்டோம்.

அப்பா மீது மகன் வெறுப்புடன் இருக்க ஒரு காரணம் சொல்லப்படுகிறது. இது எந்த விதத்திலும் ஈர்க்கவில்லை. வில்லன் என்று பெயர் அளவிற்கு ஒருவர் வருகிறார். தாத்தாவும் பேரனும் சேர்ந்து மது அருந்துகிறார்கள். இப்படிதான் இருக்கிறது காட்சி அமைப்பு.      

இந்திய அளவில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, வித்தியாசமானநடிப்பை தருபவர் தனுஷ். இது போன்ற கதைகளில் எப்படி நடிக்க ஒப்பு கொண்டார்? தனுஷிடம் இருந்து சிறந்த படங்களை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

 திருச்சிற்றம்பலம்தலைப்பு மட்டும்தான் பவர் ஃபுல்!  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com