
பிப்ரவரி மாதம் வந்தாலே போதும் காதலர்களுக்கு கொண்டாட்டம்தான். இந்த நாளில் புரோபோஸ் செய்தால் நிச்சயம் வெற்றி பெறும் என பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. உலகத்தின் அனைத்து உயிர்களும் ஏங்கி தவிப்பது ஒரு துளி அன்பிற்காகதானே. அந்த அன்பு எங்கிருந்து வந்தால் என்ன, அன்பு அன்பு தான். அதற்கு காதலர்கள் கொடுக்கும் பெயர் தான் காதல். பல வருடங்களாக மனதில் மறைத்து வைத்திருக்கும் அன்பை கூட இந்த நாள் வெளிகாட்டுவதற்கு உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட இந்த நாளை காதலர்கள் மட்டுமா, உறவுகள் பலரும் தங்களுக்கான வேலண்டைன்ஸ் நாளை கொண்டாடுகின்றனர்.
உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. முந்தைய காலங்களில் இந்த நாள் பெரிதளவில் பேசப்படாவிட்டாலும், நாகரீக வாழ்க்கையில் தற்போது அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு நாளாக இருந்து வருகிறது. இந்த நாளை கொண்டாட பலரும் ஒரு வாரத்திற்கு முன்பே தயாராகி விடுகின்றனர்.
காதலர் வாரம் பலரின் அன்பையும் அறவணைப்பையும் நிறைவு செய்யும் நாளாக பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ரோஸ் தினத்துடன் தொடங்கி, ப்ரபோஸ் தினம், சாக்லேட் தினம், டெடி டே, பிராமிஸ் டே, ஹக் தினம் மற்றும் கிஸ் தினம் இறுதியாக பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்துடன் முடிவடைகிறது. காதலர்கள் காதலர் தினத்திற்கு முந்தைய வாரத்தை பல அர்த்தமுள்ள வழிகளில் தங்கள் காதல் மற்றும் உறவுகளை கொண்டாடவும் வலுப்படுத்தவும் செலவிடுகிறார்கள்.
பிப்ரவரி 7 - ரோஸ் டே
பிப்ரவரி 8 - முன்மொழிவு தினம்
பிப்ரவரி 9 - சாக்லேட் தினம்
பிப்ரவரி 10 - டெடி டே
பிப்ரவரி 11 - புரொபோஸ் டே
பிப்ரவரி 12 - ஹக் டே
பிப்ரவரி 13 - கிஸ் டே
பிப்ரவரி 14 - காதலர் தினம்
நா.முத்துக்குமார் காதலை பற்றி அழகான வரிகளை கூறியிருப்பார்..
காதலித்து கெட்டுப்போ.. அதிகம் பேசு.. ஆதி ஆப்பிள் தேடு, மூளை கழற்றி வை, முட்டாளாய் பிறப்பெடு, கடிகாரம் உடை, காத்திருந்து காண், நாய்க்குட்டியை கொஞ்சு, நண்பனாலும் நகர்ந்து செல், கடிதமெழுத கற்றுக்கொள்
என அட்டகாசமான வரிகளை எழுதியிருப்பார்.
தற்போதைய காலத்தில் பலரும் இந்த 7 நாளையும் வரிசையாக பாலோ செய்து வருகிறார்கள். அண்டம் முழுவதையும் சமநிலைப்படுத்துவது அன்பு தானே. எனவே அனைவரும் காதலிப்போம்!