வயதில் இல்லை வருத்தம்; மனதில் இருக்கு மகிழ்ச்சி!

அக்டோபர்1, உலக முதியோர் தினம்
World Older Persons Day
World Older Persons Day
Published on

ன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, ஒற்றுமை, வேற்றுமை என பலவித அனுபவங்களைக் கடந்து வரும் வாழ்க்கை 60 வயதைத் தாண்டிய பிறகு மேலும் அமைதியையும் நிம்மதியையும் நாடத் துவங்குகிறது. ‘முதியோர்’ என்ற முத்திரை குத்தப்பட்டதும் நமது மனமும் உடலும் மாற்றங்கள் காண ஒருசிலருக்கு அது மகிழ்ச்சியாகவும் சிலருக்கு அது விரக்தியும் தரும் விஷயமாகி விடுகிறது.

பொதுவாகவே, முதுமை காலம் வந்ததும் தாங்கள் உறவுகளால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற சந்தேகமும் வயதாகி விட்ட இயலாமையும் தோன்றி மனதில் சலிப்பு மிகும். அதற்கான தீர்வாக சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

1. முதியோர்கள் என்றாலும் நீங்களும் இளைஞராக இருந்து வந்தவர்களே என்பதை மனதில் கொள்ளுங்கள். நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவது, ஒன்றாக நடைப்பயிற்சிக்கு செல்வது, வீட்டில் இருக்கும்போது சின்னத்திரையில் பிடித்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பது, பேரன் பேத்திகளுடன் விளையாடுவது என்று நேரங்களை பரபரப்பாக மாற்றிக் கொள்ளுங்கள்.

2. உங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்றால் மகன் அல்லது மகளின் தயவை எதிர்பார்த்து தயங்கி நிற்காதீர்கள். தற்காலத்தில் டாக்ஸி சேவைகள் அதிகம் பெருகிவிட்டன. உங்கள் மொபைல் போனில் அதற்கான இணையதள வசதிகளைபதிவிறக்கம் செய்து நீங்களே தேவைப்படும்போது வெளியே சென்று பழகலாம் . முதல் இரண்டு முறை சிரமமாக இருக்கும் பின் பழகிவிடும்.

3. முதுமை குறித்த அச்சத்தை மனதில் இருந்து எடுத்து விடுங்கள். வயது ஏறுவதும் ஆரோக்கியம் குறைவதும் இயற்கையாக நிகழும் ஒன்று. நிலையற்ற வாழ்க்கையை புரிந்து ஒரு வயதிற்கு மேல் நாமும் அதற்கு பக்குவப்பட்டு மனதளவில் தயாராக இருக்கப் பழக வேண்டும். உடல்நிலை குறித்த அச்சத்தை அகற்றி இருக்கும் வரை ஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

4. எல்லா வசதிகளும் இருக்கிற.து வீட்டில் அருமையாக தாங்குகிறார்கள். இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு வெறுமை இருந்தால் உங்களை சுற்றி நடக்கும் சமூக நிகழ்வுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, கோயில்களில் மேற்பார்வை, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறு சிறு சேவைகள், முதியோர் இல்லத்தில் உங்களை போல் இருப்பவர்களுடன் சென்று பேசி அளவளாவுவது போன்ற செயல்களில் ஈடுபடுங்கள்.

இதையும் படியுங்கள்:
அமைதியான மனநிலை மேம்பாட்டிற்கு உதவுமா சைவ உணவுகள்?
World Older Persons Day

5. தற்போது நூறு வயதுக்கு மேல் வாழ்பவர்கள் அதிகம் பெருகிவிட்டனர். காரணம், மருத்துவம் மற்றும் வசதிகள். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களால் முடியக்கூடிய உடற்பயிற்சிகளையும் மனதில் உற்சாகம் தரும் விஷயங்களை செய்யவேண்டியது மட்டும்தான். அதோடு உங்கள் உடல் நலனுக்கு ஏற்ற உணவுகளை சீரான இடைவெளியில் எடுத்துக் கொள்வது முக்கியம்.

6. உங்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமென்றால் கேட்பதற்கு சற்றும் தயங்காதீர்கள். ஏனெனில், சிறியவர்கள் அப்போதுதான் தங்கள் பொறுப்பை உணர்வார்கள். ஆனால், அதற்காக அவர்களை தொடர்ந்து நச்சரிப்பதும் தவறு. உங்களால் செய்ய முடியாத விஷயங்களுக்கு மட்டும் அவர்களின் உதவியை நாடுவதில் தவறு எதுவும் இல்லை .இதற்காக குற்ற உணர்ச்சி தேவையே இல்லை. காரணம் நீங்கள்தான் அவர்களைப் பெற்றவர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com