
உலகின் 7 வது பெரிய கடற்படை கொண்டது இந்திய கடற்படை. பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய 294 போர்க்கப்பல்கள், 190 கப்பல் படை போர் விமானங்கள் உள்ளன.ஆரம்பத்தில் பிரிட்டிஷ் அரசுதான் இந்திய கப்பல் படையை உருவாக்கியது.
விசாகப்பட்டினத்தில் 1941 ல் அப்போது இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1946 ல் இரு கப்பல் கட்டும் தளங்களும் அதற்கு தேவையான தொழிற்சாலைகளும் கட்டிமுடிக்கப்பட்டன. இதை 1952 ல் இந்திய அரசு ஏற்று "இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்" என்ற நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது. இதன் முதல் முயற்சியானது அதன் முதல் திட்டமான SS ஜல உஷாவுடன் தொடங்கியது - இது 8,000 டன் எடையுள்ள நீராவிக் கப்பல், இது மார்ச் 14, 1948 அன்று ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது.
இந்திய போர் கப்பல்களின் பெயருக்கு பின்னால் INS என்று இருக்கும் (Indian Naval Ship) நம் நாட்டின் முதலாவது போர்க் கப்பலை 1968 ம் ஆண்டு அக்டோபர் 23 ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இயக்கி வைத்தார். அந்தக் கப்பலின் பெயர் நீலகிரி. INS -அம்பா நீர் மூழ்கி கப்பல் களுக்கெல்லாம் தாய்க் கப்பல் 1974 ம் ஆண்டு ரஷ்யாவிடம் வாங்கப்பட்டது இதை "நீர் மூழ்கிக்கிடங்கு கப்பல்" என்பர்.
INS -கல்வரி 1971 ம் ஆண்டு நடந்த இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் 30 நாட்கள் கடலுக்கு அடியில் இருந்த நீர்மூழ்கிக் கப்பல். கல்வரி என்பது ஒருவகை திமிங்கலத்தின் பெயர். இந்த போரில் இந்தியா வெல்ல காரணமாக இருந்தது கல்வரி . இந்த வெற்றியின் நினைவாக ஆண்டுதோறும் டிசம்பர் 4 ந்தேதி இந்திய கப்பற்படை தினம் 1971 ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
இந்தியா 1961 முதல் போர்க்கப்பல்களைப் பயன் படுத்துகிறது. பழைய ஐஎன்எஸ் விக்ராந்த் உட்பட அவை எதுவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை அல்ல. 1961 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விராட் ஆகியவை ஆங்கிலேயர்களால் தயாரிக்கப்பட்டன. ஐஎன்எஸ் விராட் உலகிலேயே அதிக காலம் சேவை செய்த போர்க்கப்பல் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. விராட், 27,800 டன் எடையுள்ள சென்டார் வகை விமானம் தாங்கி போர்க்கப்பல்.
இந்தியாவின் முதல் போர்க் கப்பல் ஐஎன்எஸ் சாவித்ரி இந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனம் இந்திய தொழில்நுட்பத்தில் 1989 ம் ஆண்டு செப்டம்பரில் உருவாக்கப்பட்டு. 1992 பிப்ரவரி 7 ல் கப்பல் இந்திய படையில் சேர்ந்தது, ஐஎன்எஸ் விபோதி இந்தியாவில் இந்திய தொழில்நுட்பத்தில் உருவான முதல் ஏவுகணை கப்பல். மும்பை முகாம் டக்கில் 1991 ஏப்ரல் 26 ல் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் நீர் மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் சக்தி மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் மூலம் 1989 செப்டம்பரில் துவக்கப்பட்டு 1992 பிப்ரவரி 7 ம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், கேரளாவில் உள்ள கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட்டில் ரூ.20,000 கோடி செலவில் கட்டப்பட்டது.