
உதவித் தொழில்நுட்பம் (Assistive Technology) என்பது எந்த ஒரு பொருளையும் உபகரணத்தையும் மென்பொருளையும் அல்லது தயாரிப்பு அமைப்பையும் பராமரிக்க அல்லது மேம்படுத்த பயன்படுகிறது. உடல்நலக் குறைபாடுள்ள மக்களுக்கு இது பெரிதும் உதவுகிறது. இந்த உதவித் தொழில்நுட்பங்கள் அவர்களுக்கு கற்றல், வேலை செய்தல், அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய வேலைகளில் உதவும் உபகரணங்கள் ஆகும். சக்கர நாற்காலிகள், காது கேட்கும் கருவிகள், ப்ரெய்லி புத்தகங்கள் வீடியோக்கள் போன்றவை உதவித் தொழில்நுட்ப சாதனங்கள் தேவைப்படும் நபர்கள்.
குறைபாடு உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்: பெருமூளை வாதம், முதுகுத்தண்டு காயங்கள், பக்கவாதம், உறுப்பு துண்டிக்கப்படுதல் அல்லது வயது தொடர்பான இயக்கப் பிரச்னைகள் போன்றவற்றால் நடக்கவோ, நகரவோ அல்லது தமது கை, கால்களை பயன்படுத்துவோ சிரமப்படும் நபர்களுக்கு உதவித் தொழில் நுட்பம் உதவுகிறது. அவர்களுக்கு சக்கர நாற்காலிகள், வாக்கர்கள், பிரம்புகள், ஊன்றுகோல்கள், செயற்கை உறுப்புகள், தகவமைப்பு வாகனங்கள், லிஃப்ட், சாய்வுப் பாதைகள் படிக்கட்டு லிப்ட்கள் போன்றவை.
பார்வைக் குறைபாடு உள்ளவர்கள்: பார்வையற்றவர்கள், குறைந்த பார்வைத் திறன் உள்ளவர்கள் அல்லது நிறக் குருட உள்ளவர்களுக்கு பிரெய்லி காட்சிகள், மென்பொருள் அல்லது கையடக்க உருப்பெருக்கிகள், பேசும் சாதனங்கள், கடிகாரங்கள், தெர்மோஸ்டார்டுகள், பெரிய அச்சுப் பொருட்கள், வெள்ளை ஊன்றுகோல்கள், வழி செலுத்துவதற்கான GPS பயன்பாடுகள்.
கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்கள்: காது கேளாதவர்கள் அல்லது கேட்கும் திறன் குறைவாக உள்ளவர்களுக்கு கேட்கும் கருவிகள், காக்லியர் இம்ப்லாண்டுகள், தனிப்பட்ட கேட்கும் சாதனங்கள், FM அமைப்புகள், வசன சேவைகள், அதிர்வு அலாரம் கடிகாரங்கள், ஒளிரும் கதவு மணிகள் போன்றவை.
தொடர்புக் கோளாறுகள்: பெருமூளை வாதம், ஏ.எல்.எஸ் அல்லது ஆட்டிசம், ஸ்பெக்ட்ரம் கோளாறுகள் போன்ற நிலைமைகளால் பேச சிரமப்படுபவர்கள் போன்றவர்களுக்கு அதிநவீன பேச்சு உருவாக்கும் சாதனங்கள், குரல் பெருக்க அமைப்புகள் போன்ற சாதனங்கள் பயன்படுகின்றன.
கற்றல் குறைபாடுகள்: வாசிப்பு, எழுதுதல், கவனம் செலுத்துதல் அல்லது ஒழுங்கமைப்பதில் சவால்களை எதிர்கொள்ளும் டிஸ்லெக்ஸியா, டிஸ்கிராஃபியா போன்ற நிலைமைகளைக் கொண்ட நபர்களுக்கு மென்பொருள் பேச்சு, உரை மென்பொருள், ஆடியோ புக்குகள், கிராபிக் அமைப்பாளர்கள், கால்குலேட்டர்கள், சொல் கணிப்பு மென்பொருள், நினைவக அமைப்புக்கான சிறப்பு பயன்பாட்டு கருவிகள் பயன்படுகின்றன.
அறிவாற்றல் குறைபாடுகள்: டிமென்ஷியா, அதிர்ச்சிகரமான மூளைக்காயம் அல்லது சில வளர்ச்சிக் குறைபாடுகள் கொண்ட நினைவகம், கவனம், சிக்கல் தீர்க்கும் திறன் போன்றவற்றைக் கொண்டவர்களுக்கு டைமர்கள், நினைவூட்டல் அமைப்புகள் குறிப்பு எடுக்கும் அமைப்புகள், குரல் காட்சி அட்டவணைகள் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள்.
நுண் மோட்டார் திறன் குறைபாடுகள்: நரம்பு பாதிப்பு, பக்கவாதம், வளர்ச்சிக் குறைபாடு அல்லது சில நோய்கள் காரணமாக துல்லியமான கை அசைவுகளுடன் போராடும் நபர்களுக்கு தகவமைப்பு விசைப்பலகைகள், கண் - கண்காணிப்பு சாதனங்கள், தலை - கண்காணிப்பு சாதனங்கள், பணிச்சூழலியல் கருவிகள் பயன்படுகின்றன.
முதியவர்கள்: அதிகமான முதியவர்கள், பார்வை, செவிப்புலன் இயக்கம் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டில் வயது முதுமை காரணமான சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். உதவித் தொழில்நுட்பம் அவர்களின் குறைகளை நீக்கி நீண்ட காலம் வாழ உதவுகிறது. பெரிய பொத்தான் உள்ள தொலைபேசிகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுக்கான ஸ்மார்ட் போன் சாதனங்கள் போன்றவை.
நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக் காலணிகள் கால் புண்களைத் தடுக்கும். நாள்பட்ட வலி அல்லது சோர்வுக்கான ஆர்த்தோடிக்ஸ், முக்கிய அறிகுறிகளை கண்காணிப்பதற்கான சாதனம் ஆகும்.
உடல், உணர்வு, அறிவாற்றல் மற்றும் நரம்பியல் கோளாறு காரணமாக அன்றாட வாழ்க்கையில் சிக்கல்களை அனுபவிக்கும் மனிதர்களுக்கு உதவும் வகையில் உதவித் தொழில்நுட்பம் பயன்படுகிறது.