1982-ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் உள்ள இசையமைப்பாளர்கள் பிரான்ஸ் நாட்டில் கூடி பேசி முடிவெடுத்தனர். அடுத்த நாளே உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. உலகம் எங்கும் உள்ள இசை கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
உலகின் பொது மொழி இசை. நாடு, மொழி, இனம் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தி இசைக்கு உண்டு.
எண்ணம், செயல், நினைவுகள் என அனைவரின் உணர்வுகளும் இசைக்கு கட்டுப்படும். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இசை இயற்கையின் படைப்புகள் எழுப்பிய ஒலிகள் மூலம் உருவானது.
இது காலத்திற்கு ஏற்ப பல பரிமாணங்களைக் கடந்து நவீன பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. உலகமக்களின் கவலையை தீர்க்கும் மாமருந்தாக இசை உள்ளது.
குறிப்பாக பெண்களின் மனநிலை மாற்றத்திற்கு இசை பெரும் பங்கு வைக்கிறது. சீரற்ற எண்ண ஓட்டம் அதீத சிந்தனையை கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம் போன்ற உணர்வு சிக்கல்களிருந்து மீள்வதற்கு இசை உதவுகிறது. சூழ்நிலைகள் ஏற்படுத்தும் பாதிப்புகளில் இருந்து பெண்கள் விரைவாக மீள்வதற்கும், இசை சிறந்த வழியாகும். இசை கேட்டால் மனம் அசைந்து ஆடும். ஏன்..? புவியே அசைந்தாடும்!
தொடர்ந்து இசையை கேட்டு வருவதாலும் பயில்வதாலும் பல நோய்களை குணப்படுத்த முடியும் . அதே நேரத்தில் பல நோய்களிலிருந்து தப்பிக்கவும் முடியும்.
உடல் சோர்வையும் நீக்கி, நாடி நரம்புகளை அமைதிப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு. இசையில் இருக்கும் சில குறிப்பிட்ட ராகங்களை நாம் கேட்கும் போது பித்தம் ,வாதம், மற்றும் கபம் ஆகியவை சமநிலைப்படும்.
இசைக்கருவிகளின் இசையை கேட்டால் தலை முடி கூட நீளமாக வளரும் என்று ஒரு ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.
இசையின் மூலம் குணப்படுத்தும் நோய்கள்:
மன அழுத்தம், இரத்த அழுத்தம், நரம்பியல் நோய்கள், அல்சைமர் நோய், அறிவாற்றல் குறைபாடுகள், மூளைக் காயம், வலிப்பு தாக்கங்கள், பக்கவாத பேச்சு மீட்பு என ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் இது நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக கருதப்படுகிறது. மியூசிக் தெரபி பற்றி இப்போது பல மேடைகளில் பல ஆய்வுச் சொற்பொழிவுகள் நடத்தப்படுகின்றன. என்ன ராகம் பாடினால் எந்த நோய் குணமாகும் என்றெல்லாம் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்பட்டதை எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.
இசைக்கு நோய் தீர்க்கும் குணம் மட்டுமல்ல கை நழுவிப்போகும் பதவி உயர்வுகளும் கூட கிடைத்ததாக கூறுகின்றனர்.
இசையை குறைந்த ஒலி அளவுடன் கேட்கும் போது காதுக்கும் மனதிற்கும் இனிமையும் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.