Potted plants
Potted plants

தொட்டியில் செடி வளர்க்க ஆசையா? இந்த 10 ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!

மார்ச் 21: உலக நடவு நாள்! World Planting Day
Published on

வீட்டிலேயே எளிமையாக தொட்டிகளில் செடிகளை வளர்க்க ஆசையா? 'ஆம்', என்றால் தொட்டிச் செடிகள் மூலம் உங்கள் வீட்டை பசுமையான சோலையாக மாற்ற உதவும் 10 வழிமுறைகளை இந்தக் கட்டுரையில் காணலாம்.

1. செம்மண்: மணல் : மக்கிய குப்பை =1:1:1) என்ற விகிதத்தில் மண் தொட்டிகளில் நிரப்பி செடிகளை வளர்ப்பது ஆரோக்கியமானது.

2. தொட்டிகளுக்கு, அதற்கென்றே கிடைக்கும் தனிப்பட்ட பெயிண்டுகளை அடித்து எடுப்பாக்கலாம். பழைய தொட்டிகளையும் நன்கு துடைத்துவிட்டு பெயிண்ட் அடிக்கலாம்: வருடக் கணக்கில் நன்றாக இருக்கும்.

3. தொட்டிகளில் உள்ள செடிகள் அல்லது பூக்கள் எடுப்பாகத் தெரிவதற்காக அடிக்கடி இடமாற்றம் செய்யவும். இந்த இடமாற்றம் அவற்றை உற்சாகத்துடன் வளரச் செய்யும்.

4. தினமும் செடிகளில் உள்ள பழுந்த இலைகள், காய்ந்த குச்சிகள், வாடிய பூக்கள் இவற்றைக் கிள்ளிவிட்டு (கத்தரிக்கோலைக் கொண்டு கட் செய்யவும்) தொட்டிகளைச் சுற்றி சுத்தமாகக் கூட்டி விடவும்.

5. தினமும் தொட்டிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதுடன், அவற்றில் படிந்துள்ள தூசி, ஒட்டடையை நீக்குவதற்கு தண்ணீரை ஸ்ப்ரே செய்து கழுவ வேண்டும். செடிகள் பளபளவென்று ஜொலிக்கும்.

6. செடிகள் பெரிதாக வளர்ந்து விட்டால், வேண்டாத கிளைகளை வெட்டி விட்டு, ஷேப் அழகாக இருக்கும்படி ட்ரிம் செய்யுங்கள். அதற்கும் மீறிப் போனால் செடியை பெரிய தொட்டிக்கு மாற்றி விடலாம்.

7. செடிகளை நெருக்கமான, அல்லது அடைசலான இடத்தில் வைத்தால் அதன் தோற்றம் மறைக்கப்படும். செடி எடுப்பாக தெரிவதற்கு, சுவர், மூலைகள் போல்  பின்னணியில் செடிகளை வைக்க வேண்டும். செடிகளின் கம்பீரத்தைக் காட்டுவது அதன் பின்னணிதான்.

8. டிகள் போன்ற இரும்பு ஸ்டேண்டுகள், வளையங்கள் பொருத்தப்பட்ட ஸ்டேண்டுகள்- உபயோகித்த சிறிய செடித் தொட்டிகளை வைத்து அழகு படுத்தலாம். சில கொடி வகைகளை கட்டிடங்கள் மாதிரியான தட்டிகள், கூடைகள், ஜாடிகள் மேல் படரவிட்டு அழகுபடுத்தலாம்.

9. வீட்டுக்குள் வைக்கும் இண்டோர் பிளான்ட்ஸ் ஆக இருந்தால், தண்ணீர் வடிவதற்கு தொட்டிகளின் அடியில் தட்டை வைக்க வேண்டும். மாதம் ஒரு முறை சுத்தம் செய்தால் போதுமானது.

10. ரே மாதிரியான செடிகளை ஒரே மாதிரியான தொட்டிகளில் வளர்த்து வரிசைப்படுத்தினால், அழகே தனிதான். பூக்கும் செடிகளாக இருந்தால் அழகோ அழகுதான்.

இந்த 10 வழிமுறைகளை பின்பற்றி தொட்டிச் செடிகள் மூலம் உங்கள் தோட்டத்தை மேலும் மெருகேற்றலாமே!

இதையும் படியுங்கள்:
பண்டைய காட்டுத் தோட்டங்கள் முதல் இன்றைய மாடித் தோட்டங்கள் வரை...
Potted plants
logo
Kalki Online
kalkionline.com