உலக காண்டாமிருக தினம்: பலரும் அறியாத ஆறு உண்மைகள்...

செப்டம்பர் 22ஆம் தேதி உலக காண்டாமிருகதினம் கொண்டாடப்படுகிறது.
rhinoceros
rhinoceros
Published on

செப்டம்பர் 22-ம் தேதி உலக காண்டாமிருகதினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து வகையான காண்டாமிருகங்களையும் கொண்டாடுவதோடு, அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துகிறது. காண்டா மிருகங்களைப் பற்றியும் அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றவே உலகம் முழுவதும் உள்ள விலங்கு மீட்பு அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் தனி நபர்களால் கொண்டாடப்படுகிறது.

காண்டாமிருகங்கள் பற்றிய ஆறு உண்மைகள் :

1. உலகில் ஐந்து வகையான காண்டாமிருகங்கள் உள்ளன. கருப்பு, வெள்ளை, சுமத்ரா, ஜாவான் மற்றும் பெரிய ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் எனவும், மேலும் மேற்கு கருப்பு காண்டா மிருகம் அழிந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

2. ஆப்பிரிக்காவில் வெள்ளை மற்றும் கருப்பு காண்டாமிருகங்கள் மட்டுமே வாழ்கின்றன, மற்ற மூன்று இனங்கள் ஆசியாவில் காணப்படுகின்றன.

3. கருப்பு மற்றும் வெள்ளை காண்டாமிருகங்கள் ஒரே உயரம் கொண்டவை. ஆனால் வெள்ளை காண்டாமிருகங்கள் கருப்பு காண்டாமிருகங்களை விட இரண்டு மடங்கு எடை கொண்டவை.

4. வெள்ளை காண்டாமிருகங்கள் உண்மையில் வெள்ளை நிறத்தில் இல்லை. அவற்றின் பெயர் அவற்றின் உதடுகளை குறிக்கும். "wyd" என்ற ஆப்பிரிக்க வார்த்தையின் தவறான புரிதலில் இருந்து வந்தது.

இதையும் படியுங்கள்:
பல்லுயிர் பெருக்கத்திற்கு உதவும் காண்டாமிருகங்கள் குறித்த 12 சுவாரஸ்ய தகவல்கள்!
rhinoceros

5. மனித விரல் நகங்கள் மற்றும் முடியைப் போலவே காண்டாமிருக கொம்புகளும் கெரட்டினிலிருந்து, தயாரிக்கப்படுகின்றன. பாரம்பரிய ஆசிய மருத்துவத்திலும் அலங்காரங்களிலும் பயன்படுத்தப்படும் கொம்புகளுக்காக காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படுகின்றன.

6. ஆப்பிரிக்க காண்டாமிருகங்கள் சுமார் 16 மாத கர்ப்ப காலத்தை கொண்டுள்ளன. மேலும் ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று வருடங்களுக்கு ஒரு குட்டியை பெற்றெடுக்கின்றன. இந்த மெதுவான இனப்பெருக்க விகிதமே காண்டாமிருக எண்ணிக்கையை அதிகப்படியான வேட்டையிலிருந்து மீட்க சவாலாக அமைகிறது.

உலக காண்டாமிருக தினமானது 2010-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் உலக வனவிலங்கு நிதியத்தினால் முதன் முதலில் அறிவிக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு முதல் இத்தினமானது செப்- 22ல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இதனை காண சிறந்த இடங்கள்:

இந்தியாவில் பல குறிப்பிடத்தக்க தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. அங்கு இந்த அற்புதமான காண்டாமிருகங்களை பார்க்கலாம்.

மிகவும் பிரபலமான ஒன்று அசாமில் அமைந்துள்ள காசிரங்கா தேசிய பூங்கா. இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டானில் மட்டுமே காணப்படும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் மிகப்பெரிய வாழ்விடம் ஆகும்.

உலக காண்டாமிருக தினத்தின் உலகளாவிய விரிவாக்கத்தை குறித்தது.

உலக காண்டாமிருக தினத்தின் முக்கியத்துவம் :

பரவலாக வேட்டையாடுதல், கால நிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் அவற்றின் இயற்கை சூழல்களுக்கு ஏற்படும் இடையூறுகள் காரணமாக காண்டாமிருக இனங்கள் அழிந்து போகும், அபாயத்தில் உள்ளன .

உலக அளவில் காண்டாமிருக இனங்களை பாதுகாப்பதற்கும் அவசர தேவை குறித்த விழிப்புணர்வை பரப்புவதின் முக்கியத்துவத்தை ஆண்டுதோறும் நினைவூட்டும் விதமாக உலக காண்டாமிருக தினம் செயல்படுகிறது.

பாதுகாப்பு சட்டம்:

காண்டாமிருகங்களைப் பாதுகாக்க இந்தியா மற்றும் நேபாளம் பல சட்டங்களையும் உத்திகளையும் செயல்படுத்தியுள்ளன. இந்தியாவில் 1910இல் காண்டாமிருக வேட்டை தடை செய்யப்பட்டது .

1957-ல் இந்தியாவில் காண்டாமிருகங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்டது.

இதையும் படியுங்கள்:
அழிவின் விளிம்பில் ஜாவா காண்டாமிருகம் (Rhinoceros Javan)
rhinoceros

மேலும் 2019-ல் தேசிய காண்டாமிருக பாதுகாப்பு உக்தி அறிமுகப்படுத்தப்பட்டது. அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் 1954-ல் சொந்த காண்டாமிருகம் பாதுகாப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்தச் சட்டங்கள் காண்டாமிருகங்களை வேட்டையாடுவதை தடுப்பது அவற்றின் வாழ்விடங்களை பாதுகாப்பது மற்றும் சட்டவிரோத வர்த்தகத்தை தடுப்பது போன்ற முயற்சிகளை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com