அமெரிக்கா பயணத்தின் போது விமானத்தில் பிரதமர் மோடி! வைரல் புகைப்படம்!

அமெரிக்கா பயணத்தின் போது விமானத்தில் பிரதமர் மோடி! வைரல் புகைப்படம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

பிரதமர் மோடி அமெரிக்காவில் நடைபெறும் குவாட் உச்சிமாநாடு மற்றும் ஐ.நா, பொதுச்சபைக் கூட்டட்த்தில் உரையாற்ற நேற்று புறப்பட்டுச் சென்றார். அவர் அந்த விமானப் ப்யணத்தின்போது, கோப்புகளை எடுத்து பார்த்து, ஆய்வு செய்யும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதமர் மோடி டெல்லியிலிருந்து 4 நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டார். அங்கு வெள்ளை மாளிகையில் 24-ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்து, அவருடன் ஆப்கானிஸ்தான் விவகாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க உள்ளார். பின் அமெரிக்கா, இந்தியா ,ஜப்பான் ,ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கொண்ட குவாட் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.அதனை தொடர்ந்து, நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, 25-ம் தேதி ஐநா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று விமானத்தில் பயணித்த போது, தான் கொண்டு சென்ற கோப்புகளை எடுத்து பார்த்து, ஆய்வு செய்தவாறு உள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com