இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் அறிமுகமான 19 வயது வீரர் பும்ராவையே கதிகலங்கச் செய்திருக்கிறார்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதுவும் ஐந்து நாட்களுக்கு குறைவான நாட்களிலேயே ஆட்டத்தை முடித்தது. இரு அணிகளுக்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பானில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதன் முதல் நாள் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் பாதியிலேயே ஆட்டம் நின்றது. பின் அடுத்தடுத்த நாட்கள் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது. மூன்றாவது போட்டி ட்ராவில் முடிந்தது.
அந்தவகையில் தற்போது நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கான்ஸ்டாஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி களமிறங்கியது. முந்தைய போட்டியில் விளையாடிய நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக 19 வயது வீரர் சாம் கான்ஸ்டாஸ் தனது அறிமுக போட்டியில் விளையாடுகிறார். இதன் தொடக்க ஓவரை பும்ரா வீச அதை எதிர்கொண்ட சாம் அந்த ஓவரை மெய்டன் ஆக்கினார்.
மீண்டும் ஆறாவது ஓவர் பும்ரா வீசினார். இதன் முதல் பந்திலேயே சாம் பவுண்டரி அடித்தார். இரண்டாவது பந்தை ராம்ப் சிக்ஸர் ஒன்றை அடித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.
பும்ராவின் பந்தை அனுபவ வீரர்களே நேரடியாக அடிக்கவே தடுமாறுவார்கள். ஆனால், சாம் இப்படி அதிரடியாக விளையாடி பும்ராவையே மிரள வைத்திருக்கிறார்.
சாம் விரைவில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 60 ரன்களில் ஜடேஜாவின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். மேலும், 52 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதன் மூலம் இளம் வயதில் அரை சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
மேலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 23 ஸ்கூப் ஷாட்கள் மட்டுமே அடிக்கப்பட்ட நிலையில், இந்த போட்டியில் மட்டும் சாம் கோன்ஸ்டாஸ் ஐந்து ஸ்கூப் ஷாட்களை ஆடி மிரட்டி இருக்கிறார்.