ஒலிம்பிக் வரலாற்றின் கருப்புப் பக்கம்: 300 புறாக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விசித்திரக் கொடுமை!

1900 Paris Olympics - ஒலிம்பிக் வரலாறு
1900 Paris Olympics - ஒலிம்பிக் வரலாறுAI Image
பாரதி

Hii… I am Kavi Bharathi. Working as a Content Writer in the name Bharathi. Experiencing in Writing and Social Media Handling. And probably writing in News, Sports News, Cinema News, Art/Culture, Beauty/Fashion. Working hard to grab your attention through my contents. I will try my best to fulfill your expectations.

Updated on: 

ஒலிம்பிக் வரலாறு கண்ட மிக மோசமான புறா சுடுதல் போட்டி:

1900ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி, ஒலிம்பிக் வரலாற்றிலேயே ஒரு விசித்திரமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. உலக கண்காட்சியின் (World’s Fair) ஒரு பகுதியாக ஐந்து மாதங்கள் நீடித்த இந்தப் போட்டிகளில் மிகவும் மோசமான நிகழ்வு என்றால் 'உயிருள்ள புறாக்களைச் சுடும் போட்டி' தான்.

புறா சுடுதல் மட்டுமல்லாமல், நீருக்கடியில் நீந்துதல் (Underwater Swimming), தடை தாண்டி நீந்துதல் மற்றும் சூடான காற்று பலூன் (Hot Air Balloon) போட்டிகள் போன்ற விசித்திரமான போட்டிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.

பலர் தாங்கள் கலந்துகொண்டது ஒரு சாதாரண விளையாட்டுப் போட்டி என்றே நினைத்தார்கள். தாங்கள் ஒலிம்பிக் பதக்கத்தைத்தான் வென்றோம் என்பது அவர்களுக்குப் பல ஆண்டுகள் கழித்தே தெரியவந்தது. அதற்கு காரணம், ஒலிம்பிக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டிகளும், விதிகளும்தான்.

இப்போட்டிகளில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்து புறாவை கொல்லும் போட்டிதான். ஒரு போட்டிக்காக விலங்குகளை கொல்வதென்பது எவ்வளவு பெரிய கொடூரம்.

ஆம்! புறாக்களை விளையாட்டுக்காக கொன்று இறுதியில் இது எவ்வளவு பெரிய கொடூரம் என்று உணர்ந்து அப்போட்டி தடைசெய்யப்பட்டது.

இப்போட்டியில் புறாக்கள், கூண்டுகளிலிருந்து பறக்கப்படவிட்டு, அதிகபட்சம் எத்தனை புறாக்களைச் சுட்டு வீழ்த்த முடியுமோ, அத்தனை சுடவேண்டும். தொடர்ந்து இரண்டு புறாக்களைச் சுடத் தவறினால், அந்த வீரர் போட்டியிலிருந்து நீக்கப்படுவார். எவர் ஒருவர் அதிக புறாக்களை கொன்று குவிக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்.

1900 Paris Olympics - ஒலிம்பிக் வரலாறு
1900 Paris Olympics - ஒலிம்பிக் வரலாறுAI Image

இப்போட்டி தொடங்கியது சுமார் 300 பறவைகள் சுட்டுக் கொள்ளப்பட்டன. பசுமையாக காட்சியளிக்கப்பட்ட அந்த புல்வெளி மைதானம், சில நேரங்களிலேயே சிவப்பு ரத்தம் படிந்த ஒரு சுடுகாடாக மாறியது. இறகுகள் கீழே விழுந்து, பறவைகள் வலியில் துடித்து இறப்பது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெல்ஜியத்தைச் சேர்ந்த லியோன் டி லண்டன் (Leon de Lunden) 21 புறாக்களைச் சுட்டு வீழ்த்தி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.

இப்போட்டி பறவைகள் ஆர்வலர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் பல எதிர்ப்புகளை கிளப்பியது. இந்த நிகழ்வு ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அவப்பெயராகக் கருதப்பட்டது.

இதன் விளைவாக, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) மிகுந்த சங்கடத்திற்குள்ளானது. இந்தப் போட்டியை 'அதிகாரப்பூர்வ' ஒலிம்பிக் நிகழ்வாகக் கருத முடியாது என்று அறிவித்ததோடு, இத்தகைய போட்டிகளுக்கு நிரந்தரத் தடை விதித்தது. மனிதனின் விளையாட்டு வேட்கைக்காக அப்பாவி உயிர்கள் பலிகொள்ளப்பட்ட அந்த நிகழ்வு, ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு கறைபடிந்த பக்கமாக இன்றும் நினைவுக்கூரப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
உலகக்கோப்பை தோல்வி: ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக நீடிப்பாரா? பிசிசிஐ அதிரடி முடிவு!
1900 Paris Olympics - ஒலிம்பிக் வரலாறு

மேலும் 1900-ம் ஆண்டு ஒலிம்பிக், பெண்கள் முதல் முறையாகப் பங்கேற்ற ஒலிம்பிக் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், இது நவீன ஒலிம்பிக் வரலாற்றில் 'தங்கப் பதக்கம்' வழங்கப்பட்ட முறையான முதல் ஒலிம்பிக் ஆகும் (1896-ல் நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக்கில் பெரும்பாலும் வெள்ளிப் பதக்கங்களே வழங்கப்பட்டன).

இவ்வளவு குளறுபடிகள் இருந்தாலும், இந்தப் போட்டிதான் பிற்காலத்தில் ஒலிம்பிக் அமைப்பின் விதிமுறைகளை முறைப்படுத்தவும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை மேலும் வலிமைப்படுத்தவும் ஒரு பாடமாக அமைந்தது.

விளையாட்டு உலகின் மிக உயரிய மேடையான ஒலிம்பிக்கின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்வதன் மூலம், இன்றைய நவீன விதிகளின் முக்கியத்துவத்தையும், விலங்கு நலன் சார்ந்த சர்வதேச விழிப்புணர்வு எவ்வாறு உருவானது என்பதையும் நீங்கள் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.

logo
Kalki Online
kalkionline.com