2008 to 2023 : சிஎஸ்கே எத்தனை முறை பைனலுக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியுள்ளது தெரியுமா?

2008 to 2023 : சிஎஸ்கே எத்தனை முறை பைனலுக்குள் நுழைந்து கோப்பையை கைப்பற்றியுள்ளது தெரியுமா?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

50 ஓவர் போட்டி, டி20 போட்டி, ஆசிய கோப்பை என சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கு எப்படி ரசிகர்களிடையே வரவேற்பு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஐபிஎல் டி20 போட்டிகளுக்கும் ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பு இருந்து வருகிறது.

2008ம் ஆண்டு முதல் வருடந்தோறும் கோடை சீசனில் நடந்துவரும் ஐபிஎல் டி20 போட்டிகள் ஆரம்பத்தில் 8 அணிகளைக் கொண்டு நடத்தப்பட்டு வந்த ஐபிஎல்-லில் தற்போது 10 அணிகள் இடம்பெற்றுள்ளன.

கிட்டத்தட்ட 2 மாதங்களாக நடக்கும் இந்த ஐபிஎல் போட்டி, ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்கு விருந்தாகவும் அமைந்து வருகிறது. தற்போது நடந்துமுடிந்துள்ள 16வது சீசன் ஐபிஎல் போட்டியில் சென்னை அணி குஜராத் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றுவரை மொத்தம் 16 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், கேப்டன் தோனி தலைமையில், சென்னை அணி இதுவரை 10 முறை இறுதிப் போட்டிக்குள நுழைந்து, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

மும்பை அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. தற்போது சென்னை அணி அதை சமன் செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதுவரை சென்னை அணியைத் தவிர வேறு எந்த அணியும் 10 முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அதன் விவரங்களை கீழே அட்டவணையில் காணலாம்.

logo
Kalki Online
kalkionline.com