2003 இறுதி சுற்று தோல்விக்கு 2023ல் ஆஸ்திரேலியாவை பழிவாங்குமா இந்தியா!

India Vs Australia
India Vs Australia
Published on

உலகக்கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் வருகிற 19 ஆம் தேதி ஆமதாபாதில் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணியுடன் இறுதிச்சுற்றில் இந்தியா மோதுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கு முன் 2003 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிச் சுற்றில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் நேருக்கு நேர் மோதின. ஆனால், அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது.

தற்போது இரு அணிகளுமே நல்ல ஃபார்மில் உள்ளன. இந்தியா இதுவரை விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரிலேய அணி 10 போட்டிகளில் இரண்டில் தோல்வி அடைந்து 8 போட்டிகளில் வெற்றிகண்டுள்ளது. அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பழிதீர்த்துக் கொண்டது.

ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இதுவரை இரண்டு முறை சர்வதேச போட்டியில் மோதியுள்ளன. ஆஸ்திரேலியா 2 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

2003 ஆம் ஆண்டு ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ரிக்கி பான்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வென்றது. ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 359 ரன்கள் குவித்து வென்றது. கேப்டன் ரிக்கி பான்டிங் 140 ரன்கள் குவித்து கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், இந்திய அணி 39.2 ஓவர்களில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மூன்றாவது முறை உலக கோப்பையை வென்றது.

இதையும் படியுங்கள்:
இந்திய அணியை எதிர்கொள்வதற்கு ஸ்டீவ் ஸ்மித்திடம் திட்டம் இல்லையா?
India Vs Australia

2023 ஆம் ஆண்டில், அதாவது உலகக் கோப்பை ஒருநாள் சர்வதேச போட்டிக்கு முன்னால் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிப்போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வென்று பட்டத்தை கைப்பற்றியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டை இழந்து 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல்  இந்தியா வீழ்ந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com