வயிற்றை சுத்தம் செய்யும் மூன்று இயற்கை பானங்கள்!

3 Natural Stomach Cleansing Drinks
3 Natural Stomach Cleansing Drinks
Published on

ப்போதுமே நம்முடைய உணவில் நார்ச்சத்து அதிகமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி நார்ச்சத்து அதிகமாக இருந்தால் அது வாயுத் தொல்லை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதோடு, வயிற்றிலுள்ள அழுக்குகளை சுத்தப்படுத்த உதவும். இதனால் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்கிறது. 

நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகள் என்று பார்க்கும்போது பச்சைக் காய்கறிகளில் தான் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் வயிற்றில் உள்ள அழுக்குகள் சுத்தமாக வேண்டுமென்றால், பழங்களை உட்கொள்ள வேண்டும். பழங்களிலும் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது கூறப்போகும் 3 வகையான பானங்களை 3 நாட்களுக்கு உட்கொண்டால், வயிற்றிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி குடலில் சேர்ந்திருக்கும் அழுக்கு முற்றிலுமாக அகற்றப்படும். 

வெஜிடபிள் ஜூஸ் - பல ஆய்வறிக்கைகளின்படி காய்கறிச் சாறு வயிற்றை சுத்தம் செய்வதற்கு உதவும் எனப்படுகிறது. இந்த பானம் தயாரிக்க கீரை, தக்காளி, கேரட், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், பாகற்காய் போன்றவற்றை நன்றாக அரைத்து தயாரிக்க வேண்டும். 

ஆப்பிள் ஜூஸ் - உங்களுக்கு பல நாட்களாக வயிற்று உபாதை இருந்தால், அல்லது வயிறு சுத்தமாக இல்லை என்பது போல் நீங்கள் உணர்ந்தால் தாராளமாக ஆப்பிள் ஜூஸ் குடிக்கலாம். ஆப்பிள் ஜூஸ் குடலில் உள்ள நச்சுத்தன்மைக்கு நல்லது என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் வயிற்றில் படிந்திருக்கும் நச்சுக்கள் வேகமாக வெளியேறும். 

ஆப்பிள் சைடர் வினிகர் - ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிளிலிருந்து எடுக்கப்படும் ஒரு சாறு தான். இதில் தேவையான அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. இது குடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தன்மையை நீக்கி தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். 300 மில்லி வெந்நீரில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து பருகுவது உடலுக்கு நல்லது. 

இந்த மூன்று பானங்களையும் தொடர்ந்து மூன்று நாளைக்கு பருகி வந்தால், வயிற்றில் உள்ள எல்லா கெட்ட சமாச்சாரங்களும் அடுத்த பத்து நாளைக்குள் வெளியேறிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com