41-வது பிறந்த நாள் கொண்டாடினார் தோனி!

 41-வது பிறந்த நாள் கொண்டாடினார் தோனி!
Updated on

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இங்கிலாந்தில் தனது 41-வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார்.

தோனியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை அவரது மனைவி சாக்க்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் Happy Birthday Dhoni என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி தோனியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனது மிகப்பெரிய ஆதரவாளராகவும் வழிகாட்டியாகவும் இருக்கும் சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தோனிக்கு கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தோனியின் 41-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தோனியின் 41 அடி உயர கட்அவுட்டை ரசிகர்கள் அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com