4வது டி20: இந்திய அணி தொடரை வெல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு!

IND VS AUS T20I
IND VS AUS T20I

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடைபெறுகிறது. குவாஹாட்டியில் நடைபெற்ற 3வது டி20 போடியில் தொடரை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்ட இந்திய அணிக்கு இன்று தொடரை வெல்ல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலக கோப்பைபோட்டியில் விளையாடியபின் ஓய்வு எடுத்த டி-20 அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் ஆடவிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி, குவாஹாட்டியில் தொடர் வெற்றியை உறுதி செய்யும் எதிர்பார்க்கப்பட்டது. மூன்றாவது போட்டியில் இந்தியா 222 ரன்கள் குவித்த போதிலும், இந்திய பந்து வீச்சாளர்கள் சரிவர செயல்படாததால், ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பெற்றது.

இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வேட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாகவே விளையாடினர். எனினும் அர்ஷ்தீப், பிரசித் கிருஷ்ணா, விஷ்ணோய், அக்ஸர் படேல் ஆகிய பந்துவீச்சாளர்களில் அர்ஷ்தீப், பிரசித் கிருஷ்ணா இருவரும் பந்துவீச்சில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல் மார்கஸ் ஸ்டோனிஸ் உள்ளிட்டோர் இந்தபோட்டியில் விளையாடவில்லை. உலகக் கோப்பையில் ஆடிய டிராவிஸ் ஹெட் மட்டுமே அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
டி20 2023: தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார்!
IND VS AUS T20I

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மென் ஜோஷ் பிலிப், பென் மெக்டெர்மோட், ஆஃப் ஸ்பின்னர் கிறிஸ் கிரீன் ஆகியோர் முதல் முறையாக களத்தில் இறங்க உள்ளனர். தன்வீர் சங்கா, கிரீன், லெக் ஸ்பின்னர் ஜாஸன் ஆகியோர் பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அர்ஷதீப் சிங், அவேஷ் கான், தீபக் சாஹர், சிவம் துபே, ருதுராஜ் கெய்க்வேட், இஷான் கிஷன், ஜெய்ஸ்வால், முகேஷ்குமார், அக்ஸர் படேல், பிரசித் கிருஷ்ணா, ரவி விஷ்ணோய், ஜிதேஷ் சர்மா மற்றும் ரிங்கு சிங்.

ஆஸ்திரேலிய அணி: மாத்யூ வாடே (கேப்டன்), ஜாஸன் பெஹ்ரன்டோர்ஃப், டிம் டேவிட், பென் துவார்ஷுஸ், நாதன் எல்லிஸ், கிரிஸ் கிரீன், ஆரோன் ஹார்டீ, டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மோட், ஜோஷ் பிலிப்பி, கானே ரிச்சர்ட்சன், தன்வீர் சங்கா மற்றும் மாத்யூ ஷார்ட்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com