50 ஆண்டுகள் தடம் பதித்த ஒரு நாள் கிரிக்கெட்டின் வரலாறும், சுவாரஸ்யங்களும்!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி
Published on

ர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் களம் இறங்கி அண்மையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்திய அணி 1974ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜூலை 13ம் தேதி தங்களுடைய முதல் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. தற்போது உலக அளவில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த அணியாக  திகழ்கிறது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது முதல் அதன் விதிகள் எப்படி வந்தன என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போமா?

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையே மெல்போர்னில் 1970ம் ஆண்டு டிசம்பர் 31ந் தேதி முதல் 1971ம் ஆண்டு ஜனவரி 5ந் தேதி வரை நடக்க இருந்த ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக இவ்விரு அணிகள் இடையே 40 ஓவர் அடிப்படையில் சர்வதேச போட்டி ஒன்றை 1971ம் ஆண்டு ஜனவரி 5ந்தேதி அதே மெல்போர்னில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடத்தியது.

40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்தப் போட்டியை ஆரவாரத்துடன் உற்சாகமாகக் கண்டுகளித்தனர். இதுதான் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் உதயமாவதற்கு அடித்தளமாக அமைந்தது. அத்துடன் அது முதலாவது ஒரு நாள் போட்டியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.) ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு நாள் போட்டி அறிமுகமாகி 2021ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி  50வது ஆண்டு தினம்  ஐ.சி.சியால் கொண்டாடப்பட்டது.

ஆரம்பத்தில் 40, 45, 55 மற்றும் 60 ஓவர்கள் என்றும் ஓவருக்கு 8 பந்து வீச வேண்டும் என்பதே விதியாக இருந்தது. 1983ம் ஆண்டில் இருந்துதான் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 50 ஓவர்கள் என்றும் ஓவருக்கு 6 பந்து வீச்சு என்பதும் அறிமுகமானது.

தொடக்கத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்கள் டெஸ்ட்  போட்டிகளில் விளையாடுவது போல வெள்ளை நிற உடையில்தான் விளையாடினார்கள். 1979 ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி மெல்போர்ன் நகரில் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்தான் முதன் முதலாக வர்ண உடைகள் அணிந்து வீரர்கள் விளையாடினார்கள். ஆஸ்திரேலியா பொன் நிற உடையிலும், மே. இந்திய தீவுகள் அணி வீரர்கள் பிங்க் நிற உடையிலும்  விளையாடினார்கள்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுவாரஸ்யங்கள் அதிகரிக்கவே பவர் பிளே, பிரிஹிட் போன்றவை அறிமுகமானது. ஆட்டத்தில் விறுவிறுப்பை அதிகரிக்க பவர்-பிளே, பிரிஹிட், டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் என்று பல புதுமைகள் புகுத்தப்பட்டன.

1979ம் ஆண்டு இங்கிலாந்து-மே.இந்திய தீவுகள் அணிக்கு இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மே.இந்திய தீவுகள் அணி ஒரு பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை, இங்கிலாந்து பெளலர், பேட்ஸ்மேன் பவுண்டரியோ, சிக்சரோ அடிப்பதைத் தடுக்க ஒட்டுமொத்த பீல்டர்களையும் பவுண்டரி கோட்டுக்கு அனுப்பி விட்டார். எதிரணியினராலும், நடுவராலும்  ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், அதுவரை பீல்டிங்கிற்கு என விதிகள் எதுவும் இல்லை. இதற்கு ஒரு முடிவு கட்ட கிரிக்கெட் போர்டு பேச்சுவார்த்தை நடத்தி 1980ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியில் பந்தாடும் பகுதியில் இருந்து 30 யார்டு சுற்றளவில் வட்டம் ஒன்றை அமைத்தனர். அது தான், ‘பவர் பிளே’ உருவான கதை.

இந்த விதி 1992ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் போதுதான் முறையான விதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் 2005ம் ஆண்டு இந்த விதி பவர்பிளே என்று சில மாற்றங்களுடன் கொண்டு வரப்பட்டது, சீர்திருத்தப்பட்ட பவர் பிளே விதிகள் 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து - பங்களதேஷ் இடையே நடந்த போட்டியில் அறிமுகமானது.

இதையும் படியுங்கள்:
CSK அணிக்கு தோனி செய்த தியாகம்!
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி

நோ பால் என்பது பந்து வீச்சாளர் வீசும் முறைகேடான பந்து வீச்சாகும். இதன் விளைவாக பேட்டிங் அணிக்கு கூடுதல் ரன் வழங்கப்பட்டது மற்றும் ஒருவர் நோ பால் வீசினால், அதற்கு அடுத்த பந்தை ப்ரீ ஹிட் Free Hit  எனக் கூறி, பேட்ஸ்மனுக்கு சாதகமாக வாய்ப்பு அளிக்கப்படும். அதில் ரன் அவுட்டைத் தவிர, எப்படி அவுட் ஆனாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. ஃப்ரீஹிட் பல்வேறு மாற்றங்களை கண்டு சீர்திருத்தப்பட்ட விதிகள் 2015ம் ஆண்டு ஜூலை 10ல் இந்தியா - ஜிம்பாப்வே இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானது.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கும் போது நடுவர் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தினால் தற்போது சம்பந்தப்பட்ட இரு அணிகளின் சம்மதத்துடன் மூன்றாம் அம்பயர், பீல்ட் அம்பயர் மற்றும் டிவி ரீ பிளே தொழில்நுட்ப உதவியுடன் டிஆர்எஸ் (Decision Review System) முறையில் சரியான தீர்ப்பு வழங்கப்படுகிறது. இது 2011ம் ஆண்டில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக அறிமுகமானது.

மழை காரணமாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் ஆட்டத்தில் தடங்கல் ஏற்பட்டுவிட்டால் வெற்றி இலக்கை நிர்ணயிக்க இப்போது, ‘டக்வொர்த் லூயிஸ்’ (Duckworth-Lewis method) வழிகாட்டுதல்படி முடிவு அறிவிக்கப்படுகிறது. ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் தடைபட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான ஓட்ட இலக்கை கணிதவியலின் உதவியுடன்  நிர்ணயிக்கும் ஓர் முறையாகும். இது 2008ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com