MS Dhoni
MS Dhoni

CSK அணிக்கு தோனி செய்த தியாகம்!

Published on

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தூனாக விளங்கும் தோனி, தன்னுடைய அணிக்காக ஒரு பெரிய தியாகத்தை செய்திருக்கிறார். வாருங்கள்! அது என்னவென்று பார்ப்போம்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகியுள்ளன. 2025ம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கு முன் நடக்கும் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்திற்கு முன் நான்கு வீரர்களை மட்டுமே ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. கூடுதல் வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வேண்டும் என்று சில அணிகள் கோரிக்கை வைத்துள்ளன. இதனால், ஐந்து வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், நான்கு வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், சென்னை அணியில், ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதிஷா பதிரானா ஆகியோர் தக்க வைக்கப்படுவர். இந்த பட்டியலில் தோனி இல்லை என்பதை கவனித்தீர்களா?

ஆம்! இதில் தோனியின் தியாகமே அடங்கியுள்ளது. தோனி சென்ற ஆண்டே தனது கேப்டன் பதவியை ருதுவிற்கு வழங்கினார். பின்னர் அணியில் சாதாரண வீரராக விளையாடி வந்தார். இந்தநிலையில்தான், தோனி அணி நிர்வாகத்திடம் ஒன்றை கூறியிருக்கிறார். அதாவது ஐந்து வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டால், என்னை தக்க வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நான்கு வீரர்கள் மட்டும்தான் என்றால், என்னை தயவுசெய்து தக்க வைக்க வேண்டும். அதற்கு பதிலாக இந்த நான்கு பேரை தக்கவைத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
மகாபாரத காலத்தில் தொடங்கியதா கோகோ விளையாட்டு?
MS Dhoni

திறமையான டி20 வீரர்களாக இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே மற்றும் பதிரானா ஆகியோருடன் அனுபவம் வாய்ந்த ஆல் - ரவுண்டர் ஜடேஜாவை தக்க வைத்தால் அது சிஎஸ்கே அணிக்கு பலன் அளிக்கும். எனக்காக இந்த நால்வரில் ஒருவரை நீக்கினால்கூட அணிக்கு பெரிய இழப்பாகிவிடும் என்று கூறியிருக்கிறார் தோனி.

மேலும் தோனிக்கு அடுத்தாண்டு 45 வயது. அந்த வயதில் முழு வீச்சில் பேட்டிங் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான். ஆகையால்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறார் தோனி.



logo
Kalki Online
kalkionline.com