

எதிர்பார்ப்புகள் நிறைந்த வாழ்க்கையில் டெஸ்ட் கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கா என்ன? சதம் அடிக்காமல் 99 ரன்களில் ஆட்டமிழந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள்
ஆர்வத்தோடு விளையாடி, ரன்கள் மூன்று இலக்கத்தை நெருங்கும் தருணத்தில், அந்த குறிப்பிட்ட இன்னிங்ஸில் சதம் கைநழுவிப் போவது வருந்தக்கூடிய ஒன்று. அதிலும் குறிப்பாக, அந்த வீரர்களுக்குத் தங்கள் வாழ்நாளில் ஒருமுறை கூட டெஸ்ட் சதம் எடுக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைக்காமல் போவது மிகப்பெரிய ஏமாற்றமே. அத்தகைய சில வீரர்களின் 99 ரன் நிகழ்வுகள் பற்றி இங்கே காண்போம்.
1. நார்மன் யார்ட்லே (இங்கிலாந்து, 1947)
இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்த பொழுது நார்மன் யார்டலே அவரது டெஸ்ட் ஆட்டங்களின் அதிகபட்ச 99 ரன்கள் எடுத்தார்.ஜூன் 1947-ல் ட்ரென்ட் பிரிட்ஜ் நோட்டிங்கம் டெஸ்டில்.
ஸ்கோர்
தென் ஆப்பிரிக்க அணி
533 மற்றும் 166 /1
இங்கிலாந்து அணி
208 மற்றும் 551
இங்கிலாந்து அணி பலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடியது.நார்மன் யார்டலே 10 பவுண்டரிகள் அடித்தார் இந்த 99 ரன்கள் எடுக்க.
இவர் ஒரு சிறந்த லெக் சைடு வீரராக இருந்தும் 99 ரன்கள் எடுத்து இருந்த தருணத்தில் 100 ரன் எட்ட வேண்டும் என்ற பதட்டத்தில் லெக் சைடில் பந்தை திருப்பிய பொழுது கேட்ச் அவுட் முறையில் அவுட் ஆகி சதத்தை நழுவ விட்டார்.
20 டெஸ்டுக்கள் ஆடி 812 ரன்கள் எடுத்த நார்மன் யார்டலேவால் ஒரு டெஸ்டில் கூட சதம் எடுக்க முடியவில்லை.
இந்த டெஸ்டில் சதங்கள் கேப்டன் அலன் மேல்வ்வில்லே 189 மற்றும் 104* நாட் அவுட்
டூட்லே நோர்ஸ் 149 ரன்கள் தென் ஆப்பிரிக்க அணி சார்பாக, டேன்னிஸ் காம்படன் 163 ரன்கள் இங்கிலாந்து அணி சார்பாக
அதிக விக்கெட்டுக்கள் எரிக் ஹோலிஸ் இங்கிலந்து வீரர்
லிண்ட்ஸாய் டக்கெட் தென் ஆப்பிரிக்க வீரர்
தலா 5 விக்கெட்டுக்கள் வீழ்தினார்கள்.
டெஸ்ட் டிராவில் முடிந்தது.
2. ஜான் பெக் (நியூசிலாந்து, 1954)
தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் ஜனவரி 1954-ல் விளையாடிய டெஸ்ட் ஆட்டத்தில் ஜான் பெக் அவரது அதிக பட்ச 99 ரன்கள் எடுத்தார். அந்த முனையில் இருந்த வீரர் 99ரன்கள் எடுத்துள்ள ஜான் பெக் விளையாடி அவரது சதத்தை பூர்த்தி செய்யட்டும் என்று முனைப்புக் காட்ட, இவர் ஓட ரன் அவுட் முறையில் அவுட் ஆன ஜான் பெக்கால் டெஸ்டுகளில் சதம் எடுக்கவே இயலவில்லை.
இந்த 99 ரன்களில் ஒரு சிக்ஸர்,9 பவுண்டரிகள் அடங்கும்.இந்த டெஸ்டின் ஒரே ஒரு சதம் எடுத்தவர்
நியூஸியலாந்து வீரர் ஜான் ரீட் 135 ரன்கள்.
பவுலிங்
நியூஸியலாந்து வீரர் ஜாப் ரபோனே 6விக்கெட்டுக்கள் எடுத்தார்.
டிரா ஆன இந்த டெஸ்டின் ஸ்கோர்
நியூஸியலாந்து 505
தென் ஆப்பிரிக்கா 326 மற்றும் 159 / 3
தென் ஆப்பிரிக்க அணி பலோவ் ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்தது.
இந்த. டெஸ்டில் 99 ரன்கள் எடுத்த ஜான் பெக் மொத்தம் விளையாடிய 8 டெஸ்டுக்களில் எடுத்த ரன்கள் 394. இவர் ரக்பி, டென்னிஸ் ஆட்டங்களில் சிறந்து விளங்கியவர்.
3. ஆர். எஃப். சுர்ட்டி (இந்தியா, 1968)
26 டெஸ்டுக்கள் ஆடியுள்ள ஆர் எப் சுர்ட்டி பிடித்த கேட்சுக்கள் 26.பீல்டிங்கில் சிறந்து விளங்கிய இந்த ஆல் ரவுண்டர் இடது கை பேட்ஸ்மன் , இடது கை வேக பந்து மற்றும் ஸ்பின் போடும் வீரர்.26 டெஸ்டுள்களில் இவர் எடுத்தது 1263 ரன்கள் . 42 விக்கெட்டுக்கள்.
இந்திய அணி 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்த மார்ச் 1968 ஆக்லாந்து டெஸ்டில் ஆர் எப் சுர்ட்டி தனது அதிக பட்ச டெஸ்ட் ஸ்கோர் 99 ரன்கள் எடுத்தார்.
ஸ்கோர்
இந்திய அணி
252 மற்றும் 261 / 5 டிக்ளர்
நியூஸியலாந்து அணி
140 மற்றும் 101 ரன்கள்
நியூஸியலாந்து அணி பலோவ் ஆன் பெற்றது.
இந்த டெஸ்டில் ரன்கள் எடுத்த பிற வீரர்கள்
கேப்டன் பட்டோடி 51, சந்து போர் டே 65
விக்கெட்டுக்கள்
பிரசன்னா மொத்தம் 8
பிஷன் பேடி மொத்தம் 5
நியூஸியலாந்து வீரர் டிக் மோட்ஸ் 4 காரி பார்ட்லேட் 4
99 ரன்கள் எடுத்த ஆர் எப் சுர்ட்டி இரண்டு இன்னிங்ஸ்களிலும் துவக்க பவுலராக பந்துக்கள் வீசி மொத்தம் 4 விக்கெட்டுக்கள் எடுத்தார்.
4. மார்ட்டின் மொக்ஷ்யன் (இங்கிலாந்து, 1988)
பிப்ரவரி 1988-ல் ஆக்லாந்தில் நியூஸியலாந்து அணிக்கு எதிராக நடைப்பெற்ற டெஸ்டில் இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மட்டுமே பேட்டிங் ஆடியது. அதில் துவக்க வீரராக களம் இறங்கிய மார்ட்டின் மொக்ஷ்யன் 99 ரன்கள் எடுத்தார்.10 பவுண்டரிகள் அடித்த இவர் எதிர் கொண்ட பந்துக்கள் 269.
இவர் துவக்க நிலையில் எடுத்த 3 ரன்களை அம்பயர் லெக் பை என்று கூறிவிட்டார்.அதனால் இவருக்கு 99 ரன்கள் மட்டும் இவர் பெயரில் பதிவு செய்யப்பட்டது. டெஸ்டின் இரண்டு சதங்களும் நியூஸியலாந்து வீரர்களால் எடுக்க பட்டவை
ஜான் ரைட் 103
மார்க் கிரேட்பேட்ச் 107* நாட் அவுட்
கிரஹம் டில்லே 7 ( இங்கிலாந்து ) எவன் சாட்பீல்ட் 4
( நியூஸியலாந்து ) மொத்தம் விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
இந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது.
10 டெஸ்டுக்கள் ஆடிய மார்ட்டின் மொக்ஷ்யன் பிடித்த கேட்சுக்கள் 10.எடுத்த மொத்த ரன்கள் 455.
அடுத்த டெஸ்ட் வெல்லிங்டன் மைதானத்தில் நடைப் பெற்றுக் கொண்டிருந்த பொழுது சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார் மார்ட்டின் மொக்ஷ்யன். இவரது ஸ்கோர் 81* நாட் அவுட் என்ற நிலையில் மழையின் காரணமாக கடைசி இரண்டு நாட்கள் தடைப் பட்டு அந்த டெஸ்ட் டிராவில் முடிந்தது.இவரால் டெஸ்டுக்களில் சதம் எடுக்க முடியாமல் போய் விட்டது. இவர் 317 முதல் தர ஆட்டங்களில் 21161 ரன்கள் எடுத்துள்ளார்.. அதிக பட்சம் 274*ரன்கள் சதங்கள் 45.
5. தீபக் பட்டேல் (நியூசிலாந்து, 1992)
37 டெஸ்டுக்கள் விளையாடி உள்ள தீபக் பட்டேல் 1200 ரன்கள் மற்றும் 75 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளார்.
முதல் தர ஆட்டங்களில் 15188 ரன்கள், 26 சதங்கள் 654 விக்கெட்டுக்கள்.
இருந்தும் இவரது டெஸ்டில் அதிக பட்ச ரன்கள் 99 மட்டுமே எடுக்க முடிந்தது. இவரால் டெஸ்டில் சதம் எடுக்க முடியவில்லை.
ஜனவரி 1992 ல் க்ரைஸ்ட்சர்ச் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் சதம் எடுக்கும் வாய்ப்பு ரன் அவுட் காரணமாக கை நழுவி போய் விட்டது.
ஒரு ரன் எடுக்க வேண்டும் என்று ஓட ரன் அவுட் ஆனார் தீபக் பட்டேல் 99 ரன்கள் எடுத்த நிலையில்.
இதே டெஸ்டில் இவர் அணியின் ஜான் ரைட்டும் 99 ரன்களில் அவுட் ஆனார்.
இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்டீவர்ட் 148 ரன்கள் எடுத்தார்.
ராபின் ஸ்மித் 96, அல்லன் லாம்ப் 93 ரன்கள்.
இங்கிலாந்து பவுலர் பில் தூபினெல் மொத்தம் 11 விக்கெட்டுக்கள் எடுத்தார். ( 4 மற்றும் 7 )
இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஸ்கோர்
இங்கிலாந்து அணி
580 / 9 டிக்ளர்
நியூஸியலாந்து அணி
312 மற்றும் 264 ரன்கள்
நியூஸியலாந்து அணி பலோவ் ஆன் பெற்றது.
6. அலெக்ஸ் ஜே. துடோர் (இங்கிலாந்து, 1999)
ஜூலை 1999 ல் இங்கிலாந்து மற்றும் நியூஸியலாந்து அணிகளுக்கு இடையில் பர்மிங்ஹாம்மில் நடைப் பெற்றது டெஸ்ட் மேட்ச்.
மூன்று நாட்களில் முடிவு பெற்றது.முதலில் ஆடிய நியூஸியலாந்து அணி ஆல் அவுட் 226 ரன்கள்.அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 100 ரன்கள் குறைவாக எடுத்தது. அவர்கள் அணி ஆல் அவுட் 126.முடிவில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வென்றது.
இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்
நியூஸியலாந்து 107 ரன்கள்.
இங்கிலாந்து 211 / 3
இந்த டெஸ்டில் விளையாடிய அலெக்ஸ் ஜே துடோர் அதிர்ஷ்டம் இல்லாதவர்.
இவர் இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்சில் 99* ரன்கள் இருக்கும் பொழுது இங்கிலாந்து அணி வெற்றியை பதிவு செய்தது.
இவரை தவிர அதிக ரன்கள் இந்த டெஸ்டில் நியூஸியலாந்து அணி விக்கெட் கீப்பர் ஆடம் பராரே 73 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து பவுலர் ஆண்டி காட்டிக் மொத்தம் எடுத்த 8 விக்கெட்டுக்கள் தவிர விக்கெடுக்கள் எடுத்த வீரர்கள்
இங்கிலா பில் தூபினெல் 5, அலன் முல்லல்லி 3 நியூஸியலாந்து வீரர்கள் டியன் நாஷ் 3, கிறிஸ் கேர்ன்ஸ் 3
99*ரன்கள் எடுத்த அலெக்ஸ் ஜே துடோர் இங்கிலாந்து அணியின் சார்பாக நைட் வாட்ச்மன் ஆக களம் இறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் ஆவார்.இவரால் காயங்கள் காரணமாக இடை இடையே கிரிக்கெட் விளையாட முடியாமல் போய் விட்டது.
அதன் காரணமாகவே இவர் மொத்தம் விளையாடியது 10 டெஸ்டுக்கள் மட்டுமே.எடுத்த ரன்கள் 229.எடுத்த விக்கெட்டுக்கள் 28.
7. ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா, 2001)
708 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே, பேட்டிங்கிலும் 3154 ரன்கள் குவித்துச் சாதித்துள்ளார். 2001-ல் பெர்த் மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக அவர் 99 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இவ்வளவு ரன்கள் எடுத்தும், மிக நீண்ட காலம் விளையாடியும் வார்னேவால் ஒரு டெஸ்ட் சதம் கூட அடிக்க முடியவில்லை என்பது கிரிக்கெட் வரலாற்றின் ஒரு சுவாரசியமான பதிவு.