IPL தொடரிலிருந்து 7 முக்கிய வீரர்கள் விலகல்… எந்த அணிக்கு அதிக பாதிப்பு?

Foreign player Jos Butler
Jos Butler

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து 7 முக்கிய வீரர்கள் விலகி தங்கள் நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். இதனால் சென்னை அணி, பெங்களூரு அணி, ராஜஸ்தான் அணி மற்றும் பஞ்சாப் அணி ஆகியவை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல் தொடரின் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல கடுமையாக போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. விரைவில் ப்ளே ஆஃப் சுற்று ஆரம்பமாகவுள்ளது. லீக் சுற்றைவிட மிகவும் முக்கியமான போட்டிகள் நெருங்கி வரும் சமயத்தில் முக்கிய வீரர்கள் சிலர் அணியிலிருந்து விலகியுள்ளனர்.

ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு டி20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாகவுள்ளது. வரும் ஜூன் 2ம் தேதி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. அதன்பின்னர் 20 அணிகள் தொடரில் விளையாடும்.

டி20 உலகக்கோப்பை தேதி அறிவிக்கப்பட்டவுடனே வெளிநாட்டு வீரர்கள் மே மாதத்தின் நடுவில் பயிற்சிக்காக தங்கள் நாட்டிற்கு திரும்புவார்கள் என்று சொல்லப்பட்டது. அதன்படி வீரர்கள் நேற்றே ஐபிஎல் தொடரிலிருந்து விலகி, தங்கள் நாட்டிற்குத் திரும்பினர். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன், வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி ஆகிய நான்கு வீரர்களை அந்த நாட்டு கிரிக்கெட் அமைப்பு திரும்பப் பெற்றுக் கொண்டது. அவர்கள் நால்வரும் இங்கிலாந்து திரும்பியுள்ளனர்.

அதேபோல், இலங்கை அணியை சேர்ந்த மதிஷா பதிரானா கடந்த வாரமே இலங்கைக்கு சென்று விட்டார். முஸ்தஃபீசூர் ரஹ்மான் இரண்டு வாரங்களுக்கு முன்பே வங்கதேசத்துக்கு சென்று விட்டார். அதேபோல ஜிம்பாப்வேவைச் சேர்ந்த சிக்கந்தர் ராசாவும் நாடு திரும்பி உள்ளார்.

அந்தவகையில் யார் எந்த அணிகளை சேர்ந்தவர்கள் என்று பார்ப்போம்:

  • ஜோஸ் பட்லர்: ராஜஸ்தான் ராயல்ஸ்

  • லியாம் லிவிங்ஸ்டன்:  பஞ்சாப் கிங்ஸ்

  • வில் ஜாக்ஸ்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

  • ரீஸ் டாப்லி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

  • மதிஷா பதிரானா: சென்னை சூப்பர் கிங்ஸ்

  • முஸ்தஃபீசூர் ரஹ்மான்: சென்னை சூப்பர் கிங்ஸ்

  • சிக்கந்தர் ராசா: பஞ்சாப் கிங்ஸ்

இந்த நான்கு அணிகளும் தான் தற்போது மோசமான நிலையில் உள்ளன. சென்னை அணியை பொறுத்தவரை, அதிக விக்கெட்டுகள் எடுத்த பதிரானா மற்றும் ரஹ்மான் என இருவருமே விலகியுள்ளனர். இதனால், சென்னை அணியின் பந்துவீச்சு தற்போது பலவீனமாக உள்ளது.

அதேபோல் ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் மற்றும் அனுபவ வீரரான பட்லர் விலகியுள்ளது, ப்ளே ஆஃப் சுற்றிற்கு இன்றுவரை முன்னேறாத அந்த அணிக்கு மிகப்பெரிய நஷ்டமாக அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
இன்று லோக்சபா தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு!
Foreign player Jos Butler

பெங்களூரு அணியில் வில் மற்றும் டாப்ஸி ஆகியோர் இல்லாததால், அந்த அணியின் சமநிலை பாதிக்கப்படும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பஞ்சாப் அணியை பொறுத்தவரை எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில் அவர்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை.

அந்தவகையில் தற்போது சென்னை அணியே அதிகமாக தடுமாறும் என்றே கூறப்படுகிறது. ஏனெனில் இனி விளையாடும் ஒரு லீக் போட்டியே, அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கிய போட்டியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com