அன்று நடந்ததற்கு இன்று வரை வருந்தும் 95 வயது ஆஸ்திரேலியன் கிரிக்கெட் வீரர்!

Australian cricketer Neil Harvey
Australian cricketer Neil Harvey
Published on

அந்த இளம் இடது கை பேட்ஸ்மேன் மைதானத்தில் விளையாட வந்தார். அணி வெற்றி பெற தேவையான பவுண்டரி அடித்தார். டெஸ்ட் முடிந்தது.

அந்த அணியின் கேப்டனும், அந்த இளம் வீரரும் பெவிலியனுக்கு விரைவாக திரும்பினர்.

இந்த நிகழ்வு ஜூலை, 1948 ல் லீட்ஸ் டெஸ்டில் நடைப் பெற்றது.

கேப்டனின் வயது 40. அவரது கடைசி சுற்றுப் பயணம். இளம் வீரர் வயது 21. அவரது முதல் சுற்றுப் பயணம்.

இந்த நான்காவது டெஸ்டை தொடர்ந்த 5 வது டெஸ்ட் அந்த கேப்டனின் கடைசி டெஸ்ட். ஆகஸ்ட், 1948 ஓவல் மைதானம்.

ரசிகர்கள் மற்றும் பலரும் அவரிடம் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டு இருந்த அந்த சரித்திரம் படைக்கப் போகும் அரிய தருணம்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆல் அவுட் ரன்கள் 52.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 389. அதில் துவக்க வீரர் ஆர்த்தர் மோரிஸ் ரன் அவுட். எடுத்த ரன்கள் 196.

கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பேட்டிங் விளையாட வந்தார். பேட்டிங்கில் அவரது டெஸ்ட் ரன்கள் சராசரி 100 என்று பதிவு செய்ய, அவருக்கு தேவை 4 ரன்கள். அவர் விளையாடியது இரண்டு பந்துக்கள் மட்டுமே. இங்கிலாந்து ஸ்பின் பவுலர் ஹோலிஸ் பந்தில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார், ரன்கள் எதுவும் எடுக்காமல். எதிர் பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்தது.

ஒரு வேளை முடிந்த நான்காவது லீட்ஸ் டெஸ்டில் வெகு நன்றாக விளையாடிக் கொண்டு இருந்த கேப்டனுக்கு அன்று வாய்ப்பு கிட்டியிருந்தால், அந்த
சூழ்நிலையில் சுலபமாக அந்த தேவை பட்ட 4 ரன்களை எடுத்திருந்தால்... 100 சராசரி ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் என்ற அந்த மேஜிக் எண்ணை அடைந்து சாதித்து சரித்திரம் படைத்து இருக்க வேண்டிய வாய்ப்பு கை நழுவி போய் விட்டது.

இதையும் படியுங்கள்:
ஜூலை 20: அனைத்துலகச் சதுரங்க நாள் - (International Chess Day) செங்களம் விளையாடத் தெரியுமா?
Australian cricketer Neil Harvey

அந்த 4 ரன்கள் லீட்ஸ் டெஸ்டில் குவித்த அன்றைய 21 வயது இளம் வீரர் இதற்காக பிறகு பல முறை வருந்தியுள்ளார். அவர் தான் அந்த குறிப்பிட்ட புகழ் பெற்ற 1948 ஆம் ஆண்டு ஸர் டான் ப்ராட்மன் தலைமையில் இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி வீரர் நீல் ஹார்வே.

அந்த 1948 ஆம் வருடம் இங்கிலாந்து சென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதல் தர ஆட்டங்கள், டெஸ்ட்டுக்கள் எதிலும் தோல்வி அடையாமல் சாதித்தது குறிப்பிட தக்கது.

அந்த குழுவில் சென்றவர்களில் நீல் ஹார்வே மட்டும் தான் இன்று இருக்கிறார். இவரது வயது 95. இவர் விளையாடியது 79 டெஸ்டுக்கள். 6,149 ரன்கள். சதங்கள் 21. அரை சதங்கள் 24. கேட்சுக்கள் 64. மிக சிறந்த பீல்டர். இவரது இடது கை நேர்த்தியான பேட்டிங் ஆட்டங்களை காண ரசிகர்கள் கூடுவது வழக்கம்.

பல டெஸ்டுக்களில் தொடர்ந்து துணை கேப்டனாக இருந்த இவருக்கு ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக வழி நடத்த ஒரே ஒரு முறை தான் சந்தர்ப்பம் கிட்டியது....1960 - 61 ல் லார்ட்ஸ் டெஸ்டில். வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com