பயிற்சியாளர் குழுவிலிருந்து நீக்கப்பட்ட அபிஷேக் நாயர், கொல்கத்தா அணியில் இணைந்தார்!

Abishek nayar
Abishek nayar
Published on

பிஜிடி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து அபிஷேக் நாயர் கொல்கத்தா அணியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் கொல்கத்தா அணியில் இணைந்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா இந்திய அணிகளிடையே ஐந்து போட்டிகள் கொண்ட பாடர் கவாஸ்கர் தொடர் நடைபெற்றது.  3 - 1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆஸ்திரேலியா அணி சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு பார்டர் கவாஸ்கர் தொடரைக் கைப்பற்றியது. இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாடியது. அதிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.

இதனால் கேப்டன் ரோஹித் ஷர்மா மீதும், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீதும் விமர்சனங்கள் எழுந்தன. ஆஸ்திரேலியா அணியுடனான தொடர் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில், அதிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால் கேப்டனும் பயிற்சியாளரும் மீண்டும் விமர்சிக்கப்பட்டார்கள்.

கவுதம் கம்பீர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பயிற்சியாளர் குழு  மீதும் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் கவுதம் கம்பீர் உட்பட பயிற்சியாளர் குழுவில் உள்ளவர்களும் நீக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ எச்சரித்ததாக செய்திகள் கசிந்தன. ஆனால், அதன்பின்னர் இந்திய அணியின் கம்பேக்கால், கவுதம் கம்பீர் பயிற்சியாளராக தொடர்ந்தார்.

ஆனால், ஆஸ்திரேலியா தொடருக்கு பின்னர், புதிய பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷு கோடக் நியமிக்கப்பட்டார். சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் அபிஷேக் நாயர் மற்றும் சிதான்ஷு கோடக் என இருவருமே இந்திய அணியுடன் இருந்தார்கள்.

அபிஷேக் ஷர்மா இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து நிக்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகவில்லை. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், அபிஷேக் நாயர் அதற்குள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்துவிட்டார். இதுபற்றி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் கொல்கத்தா அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் இருந்தார். இவர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக 8 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவருக்கு உதவி பயிற்சியாளராக அபிஷேக் நாயர் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு வெள்ளரி சாம்பார்... 'WOW' சுவையில் செய்து அசத்தலாமா?
Abishek nayar

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com