சாதனை மேல் சாதனை - 'பூம் பூம்' பும்ரா!

Bumrah
Bumrah
Published on

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதில் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை வீழ்த்திய போது அது அவரது 200-வது விக்கெட்டாக (44 டெஸ்ட்) அமைந்தது. இதன் மூலம் பும்ரா பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.

மெல்போர்னில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் பும்ரா இந்த சாதனையை படைத்துள்ளார். சந்தேகத்திற்கு இடமின்றி எல்லா காலத்திலும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான இந்திய சூப்பர் ஸ்டார் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட் மைல்கல்லை கடந்ததால், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு புதிய உயரத்திற்கு உயர்ந்துள்ளார்.

ஏற்கனவே இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள பும்ரா, 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையோடு, சர்வதேச கிரிக்கெட்டில் புகழ்பெற்ற மால்கோம் மார்ஷல், ஜோயல் கார்னர் மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் ஆகியோரை முந்தியுள்ளார். 200 விக்கெட்டுகளை கடந்தும், 201 மற்றும் 202வது விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ராவின் சராசரி 19.5 மட்டும் தான்.

இதையும் படியுங்கள்:
நொடிப்பொழுதில் உற்சாகமும், தைரியமும் கொடுக்கும் சொல்லின் செல்வர்!
Bumrah

இதன் மூலம் அவர் மால்கோம் மார்ஷல் (20.9), ஜோயல் கார்னர் (21.0) மற்றும் கர்ட்லி ஆம்ப்ரோஸ் (21.0) ஆகியோரை விட சிறப்பான சராசரியை வைத்துக் கொண்டு 200 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இதுவரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த பந்துவீச்சாளரும் பும்ரா அளவுக்கு 19.56 எனும் சராசரியுடன் 200 விக்கெட்டுகளை கைப்பற்றியது இல்லை.

200 விக்கெட்டுகளை எடுப்பதற்கு அவர் 3,912 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். குறைவான ரன் விட்டுக்கொடுத்து 200 விக்கெட் வீழ்த்திய வகையிலும் பும்ராவுக்கே முதலிடம்.

இந்தத் தொடரில் ஏற்கனவே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இருந்த பும்ரா, சில அனைத்து கால ஜாம்பவான்களையும் கடந்து வரலாற்று சாதனை படைத்தார். 200 விக்கெட்டுகள் வீழ்த்திய உலக அளவில் 85-வது வீரர், இந்திய அளவில் 12-வது வீரர் ஆவார். இந்திய பவுலர்களில் இந்த இலக்கை அதிவேகமாக தொட்டவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான். அவர் 37 டெஸ்டுகளிலேயே 'டபுள்செஞ்சுரி' விக்கெட்டை எடுத்து விட்டார்.

இதையும் படியுங்கள்:
இந்த வித்தியாசமான கட்டுவிரியன் பாம்பு பற்றி தெரியுமா?
Bumrah

புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் மட்டும் பும்ரா 23 விக்கெட்டுகள் (3 டெஸ்ட்) வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டு மண்ணில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்தியர் என்ற சாதனையை தனதாக்கினார். அனில் கும்பிளே சிட்னி ஸ்டேடியத்தில் 20 விக்கெட் எடுத்ததே முந்தைய அதிகபட்சமாக இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com