நடிகர் சூர்யா – சச்சின் டெண்டுல்கர் சந்திப்பின் ரகசியம்!

நடிகர் சூர்யா – சச்சின் டெண்டுல்கர் சந்திப்பின் ரகசியம்!

பிரபல திரைப்பட நடிகர் சூர்யாவும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் அருகருகே இருப்பது போன்ற ஒரு புகைப்படம் தற்சமயம் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். இதற்காக அவர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி மும்பைக்குச் சென்று வருவதும் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து அவருடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த சந்திப்பு எங்கு, எப்போது நிகழ்ந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் இதுவரை இல்லை. நடிகர் சூர்யாவின் மும்பை பயணத்தின் போது இந்த சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், நடிகர் சூர்யா ஒரு கிரிக்கெட் ஆர்வலர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். அதன் காரணமாகக் கூட அவர் சச்சின் டெண்டுல்கரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் சூர்யாவும் சச்சின் டெண்டுல்கரும் அருகருகே நின்றிருப்பது போன்ற அந்தப் படத்தை சூர்யா தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில், 'Love and Respect' என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வீரர்கள் பலரும் சினிமாவில் ஆர்வம் காட்டி வருவது சமீப காலங்களில் நிகழ்ந்து வரும் ஒன்றாகி விட்டது. அதனால் சச்சின் டெண்டுல்கரும் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் உள்ளாரோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், நடிகர் சூர்யா நடிக்கும் படப்பிடிப்பு தளத்திலும் இது நடைபெற்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

எது எப்படியிருப்பினும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினோடு நடிகர் சூர்யா இணைந்து நிற்கும் இந்தப் படத்தை பார்க்கும் சூர்யாவின் ரசிகர்களின் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதோடு இந்தப் படத்தை சூர்யாவின் ரசிகர்கள் மற்ற சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com