

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடும் ஐபிஎல் மார்ச் 28ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது, மே 31ந்தேதி நிறைவடைகிறது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இதில் 70 லீக் போட்டிகள் நடைபெறும். இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்.
மார்ச் 28 இல் நடைபெற்ற முதல் போட்டியில் ஆர் சி பி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் RCB வெற்றி பெற்றது. அப்போட்டியில் விராட் கோலியின் அதிரடி ஆட்டம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது.
மார்ச் 29 ல் நடைபெற்ற இரண்டாம் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் கே கே ஆர் 220 ரன்கள் எடுத்து கடுமையான போட்டியை ஏற்படுத்தி ஆட்டத்தை சுவாரஸ்யமாக்கியது.
இரு போட்டிகளிலும் வென்றதன் மூலம் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு தற்போது டாப் இடத்தில் உள்ளது.
தொடர்ந்து இன்று மோதப் போகும் அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் களத்தில் உள்ளன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் ன் முதல் ஆட்டம் இன்று துவங்கும் நிலையில் ஐபிஎல் சீசனின் முதல் இரண்டு வாரங்களுக்கு கால் தசைப்பிடிப்பு காயம் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர் எம்.எஸ். தோனி விளையாட மாட்டார் என நிர்வாகம் உறுதி செய்துள்ள பதிவைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த எதிர்பாராத விலகல் சிஎஸ்கே அணிக்கு ஒரு முக்கிய பின்னடைவாகக் கருதப்பட்ட நிலையில் CSK பேட்ஸ்மென் Dewald Brevis டிவால்ட் பிரெவிஸும் காயம் காரணமாக ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இருவரது விலகல்களும் அணியின் ஆட்டத்தில் தளர்ச்சி தருமா என்ற கவலையில் உள்ளனர் ரசிகர்கள். காரணம் தோனி வெறும் விக்கெட் கீப்பர் மட்டுமல்ல, அணியின் "மாஸ்டர் பிரைன்" என்பதால், அவரது பற்றாக்குறை கிரிக்கெட் ஆட்டத்தின் யுக்திகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.குறிப்பாக கடைசி ஓவர்களில் அதிரடி காட்டும் தோனியின் பங்கு, சிஎஸ்கே பேட்டிங்கில் பெரிய வெற்றிடத்தை உண்டாக்கும் என கருதப்படுகிறது.
எனினும் இருவருக்கு பதில் மாற்று வீரர்கள் வாய்ப்பு பெறலாம். குறிப்பாக தோனிக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்புள்ளது, இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் அதிரடி பேட்டிங் மற்றும் யுக்திகளை கையாள்வார்கள் எனவும் தோனி இல்லாத இந்தப் போட்டி சுவாரஸ்யமாக இருக்குமா என்ற கேள்விக்குறி இருந்தாலும் அவரது வழிகாட்டுதலில் போட்டியில் நிச்சயமாக சிஎஸ்கே வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.