அஸ்வின் செய்த செயலுக்கு அலெஸ்டர் குக் விமர்சனம்.. அப்படி என்ன செய்தார்?

Alastair Cook criticizes Ashwin's action.
Alastair Cook criticizes Ashwin's action.

இந்திய அணிக்காக பேட்டிங் செய்த அஸ்வின் பந்தை அடித்து விட்டு பிட்ச் நடுவே ஓடியதால் அலெஸ்டர் குக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. ராஜ்கோட் நகரில் நடைபெற்றுவரும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 445 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும், சர்பராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர். அதேபோல் இங்கிலாந்து அணி சார்பாக மார்க் அவுட் அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்தார்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ததில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ரன்களை எடுத்தது. இதில் பென் டுக்கெட் 153 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடினார்.

இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்தபோது அஸ்வின் களமிறங்கினார். அப்போது பந்தை அடித்த அஸ்வின் பிட்ச் நடுவே ஓடியதால் இந்தியாவுக்கு அம்பயர் 5 ரன்கள் பெனால்டி வழங்கினார். இதனால் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கும்போதே 5/0 உடன் தொடங்கியது.

அஸ்வின் பேட்டிங் செய்யும்போது பிட்ச் நடுவே ஓடியதற்கு காரணம் அடுத்து அவர் பந்து வீசும் போது பிட்ச் சுழற்பந்துக்கு ஏற்றவாரு இருக்க வேண்டும் என்பதால்தான். ஏனெனில் பிட்ச் ஃப்ளாட்டாக இருந்தால் சுழற்பந்து வீசுவது கடினமாகிவிடும் என்பதற்காகவே அவர் இப்படி செய்தார் என அலெஸ்டர் குக் விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்:
டெல்லியில் கோரத் தீ விபத்து.. 11 பேர் பலி!
Alastair Cook criticizes Ashwin's action.

இதனைப்பற்றி டிஎன்டி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் அலெஸ்டர் குக் பேசியதாவது, ”அது வேண்டுமென்றே நடந்ததா? என்று கேட்டால், ஆம்! வேண்டுமென்றுதான் நடந்தது. இது அவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஏனெனில் தான் பந்து வீசும்போது பிட்ச் உதவியை பெறுவதற்கு இவ்வாறு செய்துள்ளார். பொதுவாக மூன்றாவது இன்னிங்ஸில் தான் இப்படி செய்வார்கள். ஆனால் 150 – 200 ரன்கள் முன்னிலையில் இருக்கும்போதே பிட்சில் மேலும் கீழும் ஓடுகிறார்கள். இதில் நேர்மைத் தன்மை இருக்கிறதா என்று கேட்டால், நிச்சயம் இல்லை.

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்தை மூன்றாவது நாளில் 400 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி விட வேண்டுமென்பதற்காக இந்திய பவுலர்கள் செய்யும் செயல் இது. இருப்பினும் பிட்ச் ஃப்ளாட்டாக இருப்பதால் அதற்கு வாய்ப்பு குறைவாகவே இருப்பது இந்திய ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது” இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com