பும்ராவை எதிர்க்கொள்ள அனைத்துத் திட்டங்களும் வகுத்துவிட்டோம் – பாகிஸ்தான் பயிற்சியாளர்!

Bumrah
Bumrah
Published on

சாம்பியன்ஸ் ட்ராபியில் பும்ராவை எதிர்க்கொள்ள அனைத்து திட்டங்களும் போட்டுவிட்டதாக பாகிஸ்தான் பயிற்சியாளர் பேசியிருக்கிறார்.

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது. 50 ஓவர்க் கொண்ட இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும்.

இந்திய அணியின் வீரர்களை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

இதையும் படியுங்கள்:
"வறுமையே நான் சந்தித்த மிகப்பெரிய சவால்" - டாக்டர் விஜயலட்சுமி!
Bumrah

ரோஹித் ஷர்மா விராட் கோலி சமீபக்காலமாக சரியாக விளையாடுவதில்லை. அதற்கு நேர்மாறாக பும்ரா சிறப்பாக விளையாடுகிறார். இவரை எதிர்க்கொள்ள அனைவருமே பயப்படுவர். இல்லையெனில் பக்கா ப்ளான் போட்டுத்தான் வருவர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தலைமை பயிற்சியாளர்  ஆகிப் ஜாவேத் பேசுகையில், “மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. இதில் எந்த அணியையும் எளிதாக கணித்துவிட முடியாது. எந்த அணியிலும் பும்ரா போன்ற ஒரு பந்து வீச்சாளர் இருந்தால், அது அந்த அணிக்கு பலமாக இருக்கும். அவரை எதிர்க்கொள்ள அவரைச் சுற்றி எல்லா திட்டங்களைப் போட்டுவிட்டோம்.

இதையும் படியுங்கள்:
சுவையான பைனாப்பிள் ரசம் மற்றும் பீட்ரூட் சாலட்: வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்!
Bumrah

பும்ராவின் உடற்தகுதி குறித்து இந்தியா தான் கவலைப்பட வேண்டும். நாங்கள் கவலைப்பட மாட்டோம்.”

“சமீபகாலமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் 200 ரன்கள் அளவு கோலாக மாறிவிட்டது. எனவே ஒருநாள் போட்டிகளில் 325 அல்லது 350 ரன்கள் கூட சாத்தியமாகும். பீல்டிங் மட்டும் கட்டுபடுத்தினால், அதிக ரன்கள் குவிக்கப்படும்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com