ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் ஆனார் ஹீலே!

Alyssa Healy
Alyssa Healy

ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டனாக அலிஸா ஹீலே அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். ஹீலே 2011 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவுக்காக 255 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதற்கான அறிவிப்பை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டது.

இதற்குமுன் கேப்டனகாக இருந்த லானிங் 2023 ஜனவரி முதல் சர்வதேச போட்டியில் விளையாடாத நிலையில் ஹீலே ஹீலே கேப்டன் பொறுப்பை தாற்காலிகமாக ஏற்றிருந்தார். இந்த நிலையில் லானிங், ஓய்வுபெற்றதை அடுத்து ஹீலே இப்போது ஆஸ்திரேலிய மகளிர் அணியின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் இந்திய சுற்றிப்பயணத்தின்போது ஆஸ்திரேலிய அணிக்கு அலிஸா ஹீலே கேப்டனாக வழிநடத்திச் செல்வார். ஆல்ரவுண்டரான தஹிலா மெக்ராத், அணியின் துணைக் கேப்டனாக இருப்பார்.

இதையும் படியுங்கள்:
ஆஸ்திரேலிய ஓபன் 2024: நிக் கிர்கியோஸ் பங்கேற்பது சந்தேகமே!
Alyssa Healy

ஆஸ்திரேலிய அணியின் முழுநேர கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு, அலிஸா ஹீலே, “கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திச் செல்ல எனக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே அணியில் இடம்பெற்றுள்ள வீர்ர்கள் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்துள்ளனர். நான் இன்று இருக்கும் நிலைக்கு எனக்கு ஊக்கம் தந்தது அவர்கள்தான்.

எனது அணுகுமுறை முன்பு இருந்த்தைப் போலவே இருக்கும். ஆனால், நான், கேப்டன் என்ற முறையில் எனது சொந்த முத்திரையை பதிப்பேன். நாங்கள் இதுவரை பெற்ற வெற்றியைத் தக்கவைக்க என்னால் முடிந்ததைச் செய்வேன்” என்று கேப்டன் ஹீலே கூறினார்.

இந்த அணியில் முழு ஈடுபாட்டுடன் விளையாடுவதற்கு இது ஒரு உற்சாகமான நேரமாகும். நம்பமுடியாத அளவு திறமைகள் கொண்ட இளம் வீராங்கனைகள் எங்கள் அணியில் இருக்கின்றனர். நாங்கள் தொடர்ந்து மற்ற அணிகளுக்கு சவாலாகவே இருப்போம் என்றும் அலிஸா ஹீலே குறிப்பிட்டார்.

ஹீலே 2011 ஆம் ஆண்டு முதல் தொடங்கி 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறார். 7 டெஸ்ட் போட்டிகள், 101 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 147 டி-20 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 6 சதங்கள், 32 அரை சதங்களுடன் முறையே 286, 2761 மற்றும் 2621 ரன்களை அவர் குவித்துள்ளார்.

குறைந்தபட்ச ஓவர்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா உருவாக்கிய மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவரான லானிங் கருதப்படுவதால், புதிய கேப்டன் ஹீலிக்கு சவால்கள் காத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com