புற்றுநோய்க்கு எதிராக போராடி வரும் அன்ஷுமன் கெய்க்வாட்!

Anshuman Gaekwad
Anshuman Gaekwad
Published on

1975. மெட்ராஸ் டெஸ்ட். மேற்கு இந்திய தீவுக்கள் அணிக்கு எதிராக போராடி, தனது இரன்டாவது டெஸ்ட்டில் அன்ஷுமன் கெய்க்வாட் எடுத்த 80 ரன்களும் பெரிதும் உதவியது, இந்திய அணியின் வெற்றிக்கு.

2024 அதே அன்ஷுமன் கெய்க்வாட், கொடிய இரத்த புற்று நோய்க்கு எதிராக போராடி வருகிறார்.

மேற்கு இந்திய வீரர்கள் ஆண்டி ராபர்ட்ஸ் , மைக்கல் ஹோல்டிங், டேனியல் போன்றவர்களின் வேக பந்துக்களை இந்திய மற்றும் மேற்கு இந்திய தீவுக்கள் மைதானங்களில் தைரியமாக முன் நின்று விளையாடியவர்.

அந்த கால கட்டத்தில் தலைக்கு ஹெல்மெட் மற்றும் காப்பாற்றும் வகையிலான அதி நவீன உபகரணங்கள் எதுவும் கிடையாது. (Modern protective gears) வரும் பந்துக்களை மார்பிலும், உடலிலும் வாங்கிக் கொண்டு விளையாட வேண்டிய சூழ்நிலை.

அன்ஷுமன் கெய்க்வாட் 10 வருட காலம் டெஸ்டுக்கள் விளையாடினார். 40 டெஸ்டுக்கள். ரன்கள் 1985. இரண்டு சதங்கள். 201 அதிக பட்சம். 15 ஒரு நாள் ஆட்டங்களில் ஆடி உள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக 671 நிமிடங்கள் நின்று விளையாடி இரட்டை சதம் எடுத்தார்.

இவருடைய தந்தை டாட்டாஜிராவ் கெய்க்வாட் இந்திய கிரிக்கெட் அணியை கேப்டனாக வழி நடத்தியவர்.

அன்ஷுமன் கெய்க்வாட், சுனில் கவாஸ்கருடன் 29 டெஸ்டுக்களில் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்காக பேட்டிங் துவக்கியவர்.

இவர் தேர்வு குழுவில் இடம் பெற்றுள்ளார். இரண்டு முறை கோச்சாக்கவும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பணி புரிந்துள்ளார்.

இவர் கிரிக்கெட் ஆடிய கால கட்டத்தில் கிரிக்கெட் வீரார்களுக்கு சில ஆயிரம் ரூபாய்களே கிடைத்து வந்தன.

தற்பொழுதிய சூழ் நிலையில் மருத்துவ செலவுகள் பல லட்சங்கள் தேவை படுகின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக லண்டனில் கிங்ஸ் காலேஜ் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்பொழுது இந்தியாவில் பெற்று வருகிறார்.

இதையும் படியுங்கள்:
இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா அல்லது வாய்ப்பை இலங்கைக்கு விட்டுக் கொடுக்குமா?
Anshuman Gaekwad

இவரது மருத்துவ செலவிற்கு உதவுவதற்கு முன்னாள் வீரர்கள் குறிப்பாக கபில் தேவ், கவாஸ்கர், சந்தீப் படீல், மொஹிந்தர் அமர்நாத், கீர்மானி, ரவி சாஸ்திரி, மதன்லால், வெங்க்சர்கார், கீர்த்தி ஆசாத் போன்ற வீரர்கள் மற்றும் பலர் முன் வந்துள்ளனர்.

பிசிசிஐ யின் உயர் மட்ட அதிகாரிகளிடம் கோரிகை வைக்கப்பட்டத்தை அடுத்து, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட்டுக்கு உடனடியாக ரூ.1 கோடி வழங்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) உச்ச கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஜெய் ஷா தனிப்பட்ட முறையில் கெய்க்வாட்டின் குடும்பத்தை அணுகி நிலைமையை மதிப்பீடு செய்து தேவையான உதவிகளை வழங்கியுள்ளார்.

அன்ஷுமன் கெய்க்வாட் உரிய சிகிச்சை பெற்று, பரிபூரண குணம் அடைய பிரார்த்திப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com