வைஷாலி, முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது!

Arjuna Award for Vaishali, Mohammed Shami!
Arjuna Award for Vaishali, Mohammed Shami!

நடப்பு ஆண்டுக்கான தேசிய விளையாட்டு  விருதுகளை மத்திய அரசு புதன்கிழமை அறிவித்த்து.

விளையைட்டுத்துறையில் மிக உயரிய விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது பாட்மின்டன் வீர்ர்களான சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி ஆகிய இருவருக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த போட்டியாளர்களுக்கான அர்ஜுனா விருது கிரிக்கெட் வீர்ர் முகமது ஷமி, தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

இவை தவிர சிறந்த பயிற்சியாளுக்கான துரோணாச்சாரியார் விருது 8 பேருக்கும், ஓய்வுக்குப் பிறகும் பங்களித்து வருபவர்களுக்கான தியான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 பேருக்கும், கல்வி நிறுவனங்களுக்கான மெளலானா அபுல் கலாம் ஆஸாத் கோப்பை 3 பல்கலைக்கழங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் ஜனவரி 9-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இந்த விருதுகளை வழங்கி கெளரவிக்கிறார்.

பாட்மின்டன் விளையாட்டில் ஆடவர் இரட்டையர்களான சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இருவரும் ஆசிய போட்டிகளில் தங்கம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்று சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை கிரிக்கெட் ஒரு நாள் சர்வதேச போட்டியில் 7 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி, இந்தியாவின் வெற்றிக்கு  முக்கிய பங்களித்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அர்ஜுனா விருது பெறுகிறார்.

இதையும் படியுங்கள்:
அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் விளையாட்டு வீரர்கள்!
Arjuna Award for Vaishali, Mohammed Shami!

சமீபத்தில் இந்தியாவின் 84-வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்த தமிழக செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலியும் அர்ஜுனா விருது பட்டியலில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு அவரது சகோதரர் பிரக்யானந்தா அர்ஜுனா விருது பெற்ற நிலையில் இந்த ஆண்டு வைஷாலிக்கு அந்த விருது கிடைத்துள்ளது.

இரண்டு கைகளும் இல்லாமல் உலக, ஆசிய, தேசிய அளவிலான வில்வித்தை போட்டிகளில்  பதக்கங்கள் வென்று சாதனை படைத்த ஷீத்தல் தேவிக்கும் அர்ஜுனா விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com