அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் விளையாட்டு வீரர்கள்!

Athletes suffering from excessive heat.
Athletes suffering from excessive heat.

அதிகப்படியான வெயில் காரணமாக விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் சில போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சர்வதேச தடகள சம்மேளனம் தெரிவித்து இருக்கிறது.

அதிகரித்து வரும் வெப்பநிலை உலகம் முழுவதும் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது. இவ்வாறு வெப்பநிலையால் ஏற்படும் பிரச்சனை தற்பொழுது விளையாட்டுத் துறையிலும் பிரதிபலிக்க தொடங்கி இருக்கிறது. அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக விளையாட்டு வீரர்கள் உடல் ரீதியான பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். இதனால் பயிற்சி நேரம் குறைகிறது.

மேலும் விளையாட்டுப் போட்டியின் பொழுது அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக விளையாட்டு வீரர்கள் மிக விரைவில் சோர்ந்து விடுகின்றனர். இவற்றை கருத்தில் கொண்டு தற்போது நெடுந்தொலைவு ஓட்டப்பந்தயம் மற்றும் நடை பயணப் போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவர் செபெஸ்தியர் கோ தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவர் செபெஸ்தியர் கோ தெரிவித்து இருப்பது, அதிகரித்து வரும் வெப்பநிலை விளையாட்டு வீரர்களின் உடைய உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இவற்றை மருத்துவ அறிக்கைகளும் நிரூபித்து இருக்கின்றன. எனவே விளையாட்டு வீரர்களின் நலன் கருதி வரக்கூடிய காலங்களில் பருவ நிலைகளை கண்காணித்து போட்டிகள் முடிவு செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
விளையாட்டாக எடுத்த DNA டெஸ்ட். விளையாட்டு வினையானது!
Athletes suffering from excessive heat.

குறிப்பாக ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கோடைகால ஒலிம்பிக் மற்றும் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இக்காலகட்டத்தில் அதிகப்படியான வெயில் நிலவி வருவதால் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படலாம். இதனால் நெடுந்தூர ஓட்டப்பந்தய போட்டிகள் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது அதிகப்படியான குளிர் காரணமாக தொலைதூர நடைப்போட்டி மற்றும் நெடுந்தூர ஓட்டப் பந்தயப் போட்டிகள் சப்போரோவுக்கு மாற்றம் செய்யப்பட்டன. பிறகு அங்கு கடுமையான வெயில் நிலவிய காரணத்தால் போட்டி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலும் காலநிலையை கருத்தில் கொண்டு போட்டிகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com