

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 19 பந்துகளில் 45 ரன்கள் விளாசி , வைபவ் சூரியவன்ஷி மீண்டும் தன் தேர்வினை நிரூபித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான அஸ்வின் அடிக்கடி இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் , சர்வதேச கிரிக்கெட் குறித்தும் அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை கூறுவது வழக்கம். இந்த முறையும் அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு அறிவுரையும் , அத்துடன் தேர்வுக் குழு மீதான தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
வெலிங்டனில் நடைபெற்ற டி20 போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா வைபவ் மற்றும் சூர்யவன்ஷி ஆகியோர் 5 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து இமாலய சாதனையை செய்துள்ளனர். இந்த கூட்டணி எளிதில் 133 ரன்களை குவித்ததால் , இந்திய அணி 199 ரன்களை 13.4 ஓவர்களில் எட்டி அதிரடியான வெற்றியை பெற்றது. இதனால் 6.4 ஓவர்கள் மிச்சமும் இருந்தது.
இது பற்றி பேசிய அஸ்வின், "இந்த போட்டியில் வைபவ் ஆட்டத்தை தொடங்கிய விதம் , ஐபிஎல் தொடர் முழுக்க அவர் செய்தது தான் . என்னை பொருத்தவரையில் வைபவ் மிகச் சிறப்பான ஒரு வீரர். அவர் எப்போதும் அப்படியே இருப்பார் , அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறப்பான சாதனைகளை செய்வதை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இஷான் கிஷன் திடீரென்று காயம் காரணமாக வெளியேறியதால் மூன்றாம் இடத்தில் களம் இறங்கும் வாய்ப்பு வைபவவிற்கு வந்தது.
இந்நிலையில் இரண்டாவது டி 20 போட்டியில் வைபவ் 8 பந்துகளில் 4 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். அடுத்த முறை தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி அவர் அதிவேகமாக ரன்களை குவித்தார். அடுத்த போட்டியில் விளையாட இஷான் கிஷான் முழு உடற்தகுதியும் பெற்றால் , வைபவ் மீண்டும் கிரிக்கெட் மேட்ச்சினை வேடிக்கை பார்க்க வேண்டி இருக்கும். அத்துடன் அபிஷேக் உடன் இணைந்து சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார்.
இந்திய அணியில் இஷான் இல்லாத நிலையில் மட்டும் வைபவ் களமிறக்கப்படுகிறார். இது சரியான வரிசையாக இருக்கிறது , மூன்றாம் இடத்தில் இறங்கி சிறப்பாக விளையாடும் திறன் சஞ்சிவிடம் உள்ளது. ஆயினும் இஷான் நாளை அணிக்கு திரும்பும் பொழுது வைபவ் கட்டாயம் ஆடும் லெவனில் சேர்க்கப்பட மாட்டார். அதே நேரம் சஞ்சு தனக்கேற்ற இடத்திற்கு திரும்புவார்." என்று கூறியிருந்தார்.
மேலும், "வைபவ் தனது தொடக்க காலத்திலேயே சற்று நிம்மதி பெருமூச்சு விட அவகாசம் கிடைத்துள்ளது , கொடுத்த காலத்தில் இவையெல்லாம் கூறுவது மிகப்பெரிய விஷயம். ஒரு நாள் அவர் இந்திய கிரிக்கெட்டில் அடையாளமாக மாறுவார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அனைவரும் ஒரு அடி பின் சென்று தனது விளையாட்டினை ரசிக்க வேண்டும்.
நான் சிறு வயதிலிருந்து கிரிக்கெட் விளையாடினாலும் 16 வயதில் சென்னையில் உள்ள மைதானங்களில் கிரிக்கெட்டை ரசித்து விளையாடினேன். அந்த வயதில் அதைத்தான் செய்ய வேண்டும். நான் எதற்கும் அவசரப்படவில்லை , வைபவ் அற்புதமான விளையாட்டை ஆடினார் , அவர் கவனிக்கப்பட வேண்டிய ஒரு திறமைசாலி. நாமும் அவரது ஆட்டத்தினை ரசிப்போம்," என்று அஸ்வின் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.