நிறைவடைந்தது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்: 85 பதக்கங்களுடன் 4-வது இடத்தை பிடித்த இந்தியா!

ஜப்பானில் கோலாகலமாக முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள்; தோஹாவிடம் கொடியை ஒப்படைத்தது ஜப்பான்!
Asian games 2026
Asian games 2026X
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கிய ஆசியன் விளையாட்டுப் போட்டிகள், இன்று அக்டோபர் 4 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. ஜப்பானில் உள்ள ஐச்சி -நகோயா நகரின் மிசுஹோ பார்க் தடகள மைதானத்திலிருந்து விளையாட்டுப் போட்டிகளில் நிறைவு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ​​ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் (OCA) கொடி ஐச்சி- நகோயாவிலிருந்து , 2030 ஆம் ஆண்டு அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் கத்தார் நாட்டின் தோஹா பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிறைவு விழா நிகழ்ச்சியில் ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ, பேரரசி மசாக்கோ மற்றும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் ஷேக் ஜோன் பின் ஹமத் அல் தானி ஆகியோர் கலந்துக் கொண்டனர். ஜப்பானின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஆசியன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து நாட்டு வீரர்களும், தங்கள் விளையாட்டு குழு பிரதிநிதியின் தலைமையின் கீழ், தங்கள் நாட்டு கொடியை ஏந்தி மேடையை நோக்கி வலம் வருவார்கள்.

இந்திய விளையாட்டு குழுவினர்கள் நீரு தண்டா தலைமையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தி வலம் வந்தனர். இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான நீரும் தண்டா 2 தங்கப்பதக்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கம் வென்றதால் அவரை பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.இரண்டு வாரங்களாக விறுவிறுப்புடன் ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளின் ஒற்றுமையையும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும் நோக்கமாக கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆசியா என்ற மையக்கருத்தை வலியுறுத்தி இந்த விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

இந்த போட்டியின் இறுதியில் இந்திய அணி மொத்தமாக 85 பதக்கங்களை வென்றிருந்தது. இதில் தங்கப்பதக்கங்கள் 21 , வெள்ளிப் பதக்கங்கள் 27 , வெண்கலப் பதக்கங்கள் 37 என்று சாதித்திருந்தது. ஆயினும் இதற்கு முன் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி பெற்றதை விட 21 பதக்கங்கள் குறைவாகவே 2026 இல் இந்தியா பெற்றிருந்தது.

கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணி மொத்தமாக 106 பதக்கங்களை வென்று 4-வது இடத்தை பிடித்திருந்தது. இதில் தங்க பதக்கங்கள் 28, வெள்ளிப் பதக்கங்கள் 38, வெண்கல பதக்கங்கள் 40 வரை வென்றிருந்தது.

Asian games
indian Shooting TeamX

ஆசிய விளையாட்டு போட்டிகளில் சீனாவின் ஆதிக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. இதுவரை சீனா, 2026 ஆசியன் விளையாட்டுப் போட்டியில் மட்டும் தங்கப் பதக்கங்கள் 169 பெற்று என்ற இமாலய பதக்க வேட்டையை நடத்தி உள்ளது. வெள்ளிப் பதக்கங்கள் 89 , வெண்கல பதக்கங்கள் 83 வரை பெற்று சாதனை செய்துள்ளது. பதக்கப் பட்டியலிலும் சீனாவே முதல் இடம் பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில் 89 தங்கப் பதக்கங்கள் பெற்று ஜப்பான் இருக்கிறது. முன்றாம் இடத்தில் உள்ள தென் கொரியா 39 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது. இந்தியா நூலிழையில் 4 ஆம் இடம் பெற்றுள்ளது , ஒருவேளை உஸ்பெகிஸ்தான் கூடுதலாக ஒரு தங்கம் வென்றிருந்தால் கூட இந்தியா கீழே இறங்க வேண்டி இருக்கும்.

logo
Kalki Online
kalkionline.com