ஆசிய விளையாட்டு 2026:பதக்கப் பட்டியலில் மிரட்டலான இடம்பிடித்த இந்தியா - 5வது இடத்திற்கு முன்னேற்றம்!

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்களின் அபார சாதனை மற்றும் பதக்க பட்டியல் நிலவரம்.
Asian games 2026
Asian games Mint
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

20 - வது ஆசியன் விளையாட்டுப் போட்டிகள், ஜப்பானில் உள்ள ஐச்சி-நகோயா நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டிகளில் இந்தியாவை சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை பெற்று, பதக்க பட்டியலில் இந்தியாவை 5- வது இடத்திற்கு உயர்த்தியுள்ளனர். ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் ஆரம்பத்தில் இந்திய அணி டாப் 10 இடங்களை தாண்டி வெளியில் இருந்தது. தற்போது இந்தியாவை சார்ந்த விளையாட்டு வீரர்களின் செயல்பாட்டினால் இந்தியா பெருமைப்படுகிறது.

செப்டம்பர் 19 ஆம் தேதியில் இருந்த ஆசியன் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா இதுவரை 15 தங்கப் பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. இந்த தொடர் முழுக்க வழக்கம் போல சீனா மிகக் கடுமையான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மொத்தமாக 161 தங்கங்களை வென்று, எவரும் நெருங்க முடியாத இடத்தில் உள்ளது.

தங்கப் பதக்கங்கள்: 5

1. ஏராளமான பதக்கங்களை இந்திய வீரர்கள் வில்வித்தை போட்டியில் பெற்று வருகின்றனர். இன்று அங்கீதா பகத் , குங்கும் மோஹத் , கீர்த்தி ஆகியோர் அடங்கிய வில்வித்தை அணி தங்கப் பதக்கம் வென்றது .

2. மகளிர் குத்துச் சண்டை 75 கிலோ பிரிவில் லவ்லினா போர்கோஹன் தங்கம் பதக்கம் வென்றார்.

3 மகளிர் குத்துச் சண்டை 65 கிலோ பிரிவில் பர்வீன் தங்கம் பதக்கம் வென்றார்.

4.ஆடவர் குத்துச் சண்டை 80 கிலோ பிரிவில் அங்குஷ் பங்கால் தங்கம் பதக்கம் வென்றார்.

5. ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ பிரிவில் சுஜித் கல்கல் தங்கம் வென்றார்.

வெள்ளிப் பதக்கங்கள்: 2

1.ரிகர்வ் கலப்பு வில்வித்தை போட்டியில் குங்கும் மோஹத் மற்றும் திரஜ் பொம்மதேவரா அடங்கிய குழு வெள்ளிப் பதக்கம் வென்றது.

2.ரிகர்வ் ஆடவர் வில்வித்தை போட்டியில் திரஜ் பொம்மதேவரா, நீரஜ் சவ்ஹான் , யாஷ்தீப் போகே ஆகியோர் அடங்கிய குழு வெள்ளி வென்றது.

Parveen won gold
parveen india today

வெண்கல பதக்கங்கள்: 2

1.மகளிருக்கான டிங்கி பாய்மர படகு போட்டியில் நேத்ரா குமணன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

2. செகப்டக்ராவ் போட்டியில் ஆடவர் பிரிவில் அருண் , பாபி குமார் , லோகோன் சிங் , ராம்குமார் ஷர்மா , ஆகாஷ் யும்னன் , மலெங்கன்பா சிங் ஆகியோர் கொண்ட குழு வெண்கலம் வென்றனர்.

logo
Kalki Online
kalkionline.com